ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.224 குறைவுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.224 குறைவு ... தொடர்ந்து சரிகிறது இந்திய ரூபாயின் மதிப்பு : ரூ.61.95 தொடர்ந்து சரிகிறது இந்திய ரூபாயின் மதிப்பு : ரூ.61.95 ...
50 சதவீத குறைந்த கட்டணத்தில் விமான பயணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2013
01:04

புதுடில்லி:இந்தாண்டு தீபாவளிக்கு, கடந்த ஆண்டை விட, 50 சதவீதம் குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பறக்கும் வாய்ப்பு, உள்நாட்டு பயணிகளுக்கு கிடைத்துள்ளது.விமானச் சேவை நிறுவனங்கள் இடையிலான போட்டி மற்றும் பயண இருக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது போன்றவற்றால், விமான கட்டணம் குறைந்துள்ளது.
முன்பதிவு: அது மட்டுமின்றி, மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு முன்பாகவே விமானபயணத்திற்கு முன்பதிவு செய்வோருக்கும், விமானச்சேவை நிறுவனங்கள், குறிப்பிடத்தக்க அளவிற்கு கட்டணச் சலுகையை வழங்குகின்றன.பல விமானச் சேவை நிறுவனங்கள், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கட்டணக் குறைப்பு செய்து, பயணிகளை ஈர்த்து வருகின்றன.சென்ற ஆண்டு, தீபாவளி வாரத்தில், மும்பை – டில்லி இடையிலான விமான பயணக் கட்டணம், 16 ஆயிரம் – 17 ஆயிரம் ரூபாயில் இருந்து துவங்கியது.
இந்தாண்டு, இதே வழித்தடத்தில், பல விமானச் சேவை நிறுவனங்கள், குறைந்த பட்சம், 10 ஆயிரம் ரூபாயை பயணக் கட்டணமாக குறைத்து நிர்ணயித்துள்ளன. இன்டிகோ, ஏர்–இந்தியா, கோ ஏர் போன்ற பல நிறுவனங்கள், தீபாவளி வாரத்தில், பெரும்பாலான வழித்தடங்களில், பயணக் கட்டணத்தை, 30–50 சதவீதம் குறைத்து, 10 ஆயிரம் –11 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் வசூலிக்கின்றன.விமானச் சேவை நிறுவனங்கள், அவற்றின் பயண இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்து உள்ளதால், விமான கட்டணத்தை குறைத்துள்ளன.
இது குறித்து, விமான பயண முகவர் ஒருவர் கூறியதாவது:கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, விமான பயணக் கட்டணம் ஓரளவு அதிகரித்துள்ளது. இருந்த போதிலும், விமானச்சேவை நிறுவனங்கள், முன்பதிவின் அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் விமானச் சேவையை வழங்குகின்றன.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், ஆகஸ்ட் 10ம் தேதிக்கு பிறகு மேற்கொள்ளும் விமான பயணத்திற்கு, ஆகஸ்ட் 3–9ம் தேதிக்குள், முன்பதிவு செய்த, 7 லட்சம் பேருக்கு சலுகை கட்டணத்தை அறிவித்தது.இதன்படி, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட, 750 கி.மீ.,க்கும் குறைவான விமான பயணத்திற்கு, 1,777 ரூபாய் கட்டணம் வசூலித்தது.
கட்டண சலுகை: இது தவிர, 750–1,000 கி.மீ., வரையிலும் மற்றும் 1,000 கி.மீ., க்கும் அதிகமான தூரத்திற்கும், முறையே, சலுகைக் கட்டணமாக, 2,777 ரூபாய் மற்றும் 3,777 ரூபாய் என, நிர்ணயித்தது. இதற்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருந்தது.இத்தகைய போட்டியை சமாளிக்கும் விதமாக, மேலும் பல விமான சேவை நிறுவனங்கள், விமான பயணக் கட்டண சலுகையை வழங்கத் துவங்கியுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.உள்நாட்டில், குறைந்த
கட்டணத்தில், அதிக அளவில் சிறிய விமானங்களை இயக்குவதில், இண்டிகோ, முன்னிலை வகிக்கிறது. இதை பின்பற்றி, மேலும் பல விமானச் சேவை நிறுவனங்கள், குறைந்த கட்டணத்தில் சிறிய விமானங்களை இயக்குவது குறித்து பரிசீலித்து வருகின்றன.
எண்ணிக்கை:அதன் அடிப்படையில், நடப்பாண்டு குளிர்காலத்தில், உள்நாட்டு விமான சேவைகளின் எண்ணிக்கை, வாரத்திற்கு, 11,886ஆக அதிகரிக்கும் என, விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் மதிப்பிட்டுள்ளது. இது, சென்ற ஆண்டை விட, 9 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.விமானச் சேவைகளின் எண்ணிக்கையும், இத்துறையில் போட்டியும் அதிகரித்துள்ளதால், விமான பயணிகள், குறைந்த செலவில், தீபாவளியை கொண்டாடும் சூழல் உருவாகியுள்ளது என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)