பதிவு செய்த நாள்
01 நவ2013
11:23

மும்பை : சுமார் 5 ஆண்டுகளுக்க பிறகு இந்திய பங்குச் சந்தைகள் இன்று (நவம்பர் 01) கடுமையாக உயர்ந்து 21,000 புள்ளிகளை கடந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது 5 ஆண்டுகள் 10 மாதங்களுக்கு பிறகு சென்செக்ஸ் 66.15 புள்ளிகள் உயர்ந்து 21,230.67 புள்ளிகளை எட்டி உள்ளது.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பங்குச் சந்தை கடுமையாக உயர்ந்துள்ளது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் 2008ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியன்று 21,206.77 புள்ளிகளை எட்டி இருந்தது.
ரூபாயின் மதிப்பு சரிந்தது: இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வந்த போதும் சர்வதேச சந்தையில் ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே வருவது ஏற்றுமதியாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச நாணய மாற்று சந்தையில் இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது(காலை 9 மணி நிலவரம்) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 45 காசுகள் குறைந்து ரூ.61.95 ஆக உள்ளது.
நேற்றைய வர்த்தக நேர இறுதியில் ரூபாயின் மதிப்பு 61.50 ஆக இருந்தது. யூரோவின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளதன் எதிரொலியாக ரூபாயின் மதிப்பிலும் சரிவு காணப்படுவதாக கூறப்படுகிறது. அதே சமயம் டாலரின் மதிப்பு 80 என்ற அளவை தாண்டி உயர்ந்துள்ளது.
நாளை தீபாவளி கொண்டாடவிருக்கும் இந்நேரத்தில் பங்கு வர்த்தகம் புதிய உச்சத்தை எட்டி பங்குதாரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|