பதிவு செய்த நாள்
01 நவ2013
13:30

மதுரை : "காஸ்' பதிவுக்கு ஆதார் அடையாளஅட்டை வற்புறுத்துவதை எதிர்த்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ஆனால் மதுரையில் உள்ள "காஸ்' நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் சிலிண்டர் பதிவுக்கு ஆதார் அடையாளஅட்டை நகலை
தர வேண்டும் என வற்புறுத்துகின்றன. வாடிக்கையாளர்களுக்கு நேரடி மானிய முறையை அமல்படுத்த முன்னோட்டமாக நேற்று முன் தினம் முதல் "காஸ்' சிலிண்டர் பதிவை விநியோகஸ்தர்கள் நிறுத்தியுள்ளனர். 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக "காஸ்' சிலிண்டர், மானியவிலையில் ரூ.401 க்கு சப்ளை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இண்டேன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய "காஸ்" நிறுவனங்கள் தங்கள் விநியோகஸ்தர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பின. அதில், வீட்டு உபயோக காஸ் சிலிண்டரை ரூ.401 க்கு பில் செய்வதை உடனே நிறுத்த வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக மானியம் அனுப்பும் முறையில் (டி.பி.டி.எல்) தான் நவ.,1
( இன்று) முதல் புக் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதன்படி "காஸ்' சிலிண்டரை ரூ.1,040க்கு பில் செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப உள்ளனர்.
வாடிக்கையாளர்கள் நேரடியாக மானியம் பெறும் முறையில் சேர, ஆதார் அடையாள அட்டை எண்ணை வங்கிக்கணக்குடன் இணைத்திருக்க வேண்டும். மதுரையில் 60 சதவீத வாடிக்கையாளர்களிடம் ஆதார் அடையாள அட்டை இல்லை. "காஸ்' சிலிண்டர் பதிவுக்கு ஆதார் அட்டை அவசியம் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ஆனால் "காஸ்' நிறுவனங்களின், "நேரடி மானிய முறையில் தான் சப்ளை' என்ற முடிவு வாடிக்கையாளர்களை பெரும் பாதிப்படையச் செய்யும். இது குறித்து இண்டேன் நிறுவன விற்பனை அதிகாரி ஸ்ரீதரிடம் கேட்ட போது, ""மானியம் பெறுவது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளதால் ஆதார் அட்டையை நாங்கள் வற்புறுத்தவில்லை. ஆனால் காஸ் சிலிண்டர் பதிவை விநியோகஸ்தர்கள் புதிய முறையில் செய்ய,சோதனை அடிப்படையில் காஸ் சிலிண்டர் பதிவு 2 நாட்களுக்கு நிறுத்தப்பட்டது. இன்று முதல் நிலைமை சீரடையும்,'' என்றார்.
காஸ் விநியோகஸ்தர் ஒருவர் கூறுகையில், ""ஆதார் அட்டை தேவையா இல்லையா என்பது குழப்பமாக உள்ளது. புதுச்சேரியில் கடந்த 3 மாதங்களாக வாடிக்கையாளர்களுக்கு நேரடிமானியம் பெறும் முறையில், காஸ் சப்ளை செய்யப்பட்டது. இதனால் அங்கு மாதம் 11 ஆயிரம் சிலிண்டர் பதிவு என்பது, 6 ஆயிரமாக குறைந்துவிட்டது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத மானியம் மட்டும் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அடுத்த 2 மாதங்களுக்கான மானியத்தொகை வரவில்லை,'' என்றார். மானிய விலை காஸ் பெறுவதற்கான முறையை கடுமையாக்குவதன் மூலம், மானிய இழப்பை தவிர்க்க எண்ணெய் நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. ஆனால் ஆதார் அட்டையை முழுமையாக அனைவரும் பெறாத நிலையில், சுப்ரீம் கோர்ட் முடிவும் தெரியாத நிலையில் "சோதனை அடிப்படையில்' என காஸ் சிலிண்டர் பதிவை நிறுத்துவது, தீபாவளி நேரத்தில் மக்களை அவதிக்குள்ளாக்கும்.
வங்கிகள் சொல்வது என்ன
தமிழகத்தில் முதன்முறையாக, மதுரை மாவட்டத்தில் இன்று முதல், "காஸ் சிலிண்டர்' மானியம், வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில், நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இதற்கு,"ஆதார்' அடையாள அட்டை நகல், வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் மற்றும் வங்கியில் தரப்படும் படிவத்தை பூர்த்தி செய்து, கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளையில் ஒப்படைக்க வேண்டும். அதன்பின், சிலிண்டர் ஏஜன்சியிடமும், விண்ணப்பம் அளிக்க வேண்டும். இதுகுறித்து, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மனோகரன்
கூறியதாவது: நவ., 1 முதல், "காஸ்' ஏஜன்சியிடம், சிலிண்டருக்கு பதிவுசெய்தால், கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டும். பதிவு செய்த உடனேயே, கூடுதலாக செலுத்திய தொகை, உங்களது வங்கிக் கணக்கில் மானியமாக வரவு வைக்கப்படும். இதுவரை பதிவு
செய்யாதவர்கள், உடனடியாக ஆதார் எண்ணை பதிவு செய்யலாம். பதிவு செய்யாவிட்டாலும், மூன்று மாதங்கள் வரை, வழக்கம் போல நேரடி மானிய விலையில் சிலிண்டர் பெறலாம். அதன்பின் மானியம் நிறுத்தப்படும், என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|