கடந்த 11 மாதங்­களில் இல்­லாத அள­வாகமுக்­கிய எட்டு துறை­களின் உற்­பத்தி 8 சத­வீதம் வளர்ச்சிகடந்த 11 மாதங்­களில் இல்­லாத அள­வாகமுக்­கிய எட்டு துறை­களின் உற்­பத்தி 8 ... ... ரூ.13,796 கோடி மானியம் வழங்க ஓ.என்.ஜி.சி.,க்கு மத்­திய அரசு உத்­த­ரவு ரூ.13,796 கோடி மானியம் வழங்க ஓ.என்.ஜி.சி.,க்கு மத்­திய அரசு உத்­த­ரவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
உள்­நாட்டில் வாக­னங்கள் விற்­பனை சூடு பிடித்­தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2013
00:16

புது­டில்லி:பண்­டிகை கால கொண்­டாட்­டங்­களை அடுத்து, உள்­நாட்டில் வாகன விற்­பனை சூடு­பி­டிக்க துவங்­கி­யுள்­ளது. இதற்கு எடுத்­துக்­காட்­டாக, சென்ற அக்­டோபர் மாதத்தில், பல முன்­னணி நிறு­வ­னங்­களின் வாகன விற்­பனை சிறப்­பான அளவில் உயர்ந்­துள்­ளது.
பொரு­ளா­தார மந்த நிலை, பண­வீக்கம் அதி­க­ரிப்பு, எரி­பொருள் விலை உயர்வு, வாகன கட­னுக்­கான வட்டி விகிதம் அதி­க­மாக இருப்­பது போன்ற பல்­வேறு இடர்­பா­டு­க­ளுக்­கி­டை­யிலும், நாட்டின் வாகன விற்­பனை சிறப்­பான அளவில் உயர்ந்­துள்­ளது.
இதற்கு, பண்­டிகை காலத்­தை­யொட்டி, பல்­வேறு வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்கள் சிறப்பு சலு­கை­களை வாரி வழங்கி வரு­வது மற்றும் புதிய வாக­னங்­க­ளுக்­கான தேவை உயர்ந்­துள்­ளது போன்­ற­வைதான் முக்­கிய காரணம் என, இத்­து­றையச் சேர்ந்த நிபு­ணர்கள் கருத்து தெரி­வித்­துள்­ளனர்.
மாருதி சுசூகி:உள்­நாட்டில் கார் தயா­ரிப்பு மற்றும் விற்­ப­னையில், முத­லி­டத்தில் உள்ள, மாருதி சுசூகி, சென்ற அக்­டோபர் மாதத்தில், 1,05,087 வாக­னங்­களை விற்­பனை செய்­துள்­ளது. இது, கடந்­தாண்டின் இதே மாதத்தில், 1,03,108 ஆக இருந்­தது. ஆக, மதிப்­பீட்டு மாதத்தில், இந்­நி­று­வ­னத்தின் வாகன விற்­பனை, 1.91 சத­வீதம் வளர்ச்சி கண்­டுள்­ளது.
உள்­நாட்டில் இந்­நி­று­வ­னத்தின் வாகன விற்­பனை, 96,002 என்ற எண்­ணிக்­கை­யி­லி­ருந்து, 96,062 ஆக சற்றே அதி­க­ரித்­துள்­ளது.அதே சமயம், இந்­நி­று­வ­னத்தின் வாக­னங்கள் ஏற்­று­மதி, 27 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 7,106லிருந்து, 9,025 ஆக உயர்ந்­துள்­ளது.
ஹூண்டாய் நிறு­வனம்:உள்­நாட்டில், கார் தயா­ரிப்பில் இரண்­டா­வது இடத்தில் உள்ள ஹூண்டாய் நிறு­வனம், சென்ற அக்­டோ­பரில், உள்­நாட்டில், 36,002 வாக­னங்­களை விற்­பனை செய்­துள்­ளது.
இது, கடந்­தாண்டின் இதே மாதத்தில், 35,778 ஆக இருந்­தது. ஆக, கணக்­கீட்டு மாதத்தில், இந்­நி­று­வ­னத்தின் வாகன விற்­பனை, 0.6 சத­வீதம் வளர்ச்சி கண்­டுள்­ளது.அதே­ச­மயம், மதிப்­பீட்டு மாதத்தில், இந்­நி­று­வ­னத்தின் ஒட்டு மொத்த வாகன விற்­பனை, 58,784 லிருந்து, 50,212 ஆக குறைந்­துள்­ளது. மேலும், ஏற்­று­ம­தியும், 38.2 சத­வீதம் குறைந்து, 23,006 என்ற எண்­ணிக்­கை­யி­லி­ருந்து, 14,210 ஆக சரி­வ­டைந்­துள்­ளது.
போர்டு இந்­தியா:முன்­னணி நிறு­வ­னங்­களுள் ஒன்­றான, போர்டு இந்­தியா, சென்ற அக்­டோ­பரில், 14,935 கார்­களை விற்­பனை செய்­துள்­ளது. இது, கடந்­தாண்டு இதே மாதத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட விற்­ப­னை­யுடன் (10,948 கார்கள்) ஒப்­பி­டு­கையில், 36.41 சத­வீதம் அதி­க­மாகும்.
குறிப்­பாக, உள்­நாட்டில் மட்டும் இந்­நி­று­வ­னத்தி்ன் வாக­னங்கள் விற்­பனை, 21 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 7,577 என்ற எண்­ணிக்­கை­யி­லி­ருந்து, 9,163 ஆக அதி­க­ரித்­துள்­ளது.இதே போன்று, இந்­நி­று­வ­னத்தி்ன் வாகன ஏற்­று­ம­தியும், 71 சத­வீதம் உயர்ந்து, 3,371லிருந்து, 5,772 ஆக வளர்ச்சி கண்­டுள்­ளது.
டொயோட்டா:டொயோட்டா கிர்­லோஸ்கர் நிறு­வ­னத்தின் வாகன விற்­பனை, சென்ற அக்­டோ­பரில், 10.94 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 15,576 ஆக உயர்ந்­துள்­ளது. இது, கடந்­தாண்டு இதே மாதத்தில், 14,040 ஆக இருந்­தது.
உள்­நாட்டில், இந்­நி­று­வ­னத்தின் வாகன விற்­பனை, 7 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 12,281 என்ற எண்­ணிக்­கை­யி­லி­ருந்து,13,162 ஆக அதி­க­ரித்­துள்­ளது. ஜெனரல் மோட்டார் இந்­தியா நிறு­வ­னத்தின் வாகன விற்­பனை, மதிப்­பீட்டு மாதத்தில், 14.22 சத­வீதம் அதி­க­ரித்து, 6,754 லிருந்து, 7,715 ஆக வளர்ச்சி கண்­டுள்­ளது.
ஹீரோ மோட்­டோகார்ப்:இரு­சக்­கர வாகன விற்­ப­னையில் முன்­ன­ணியில் உள்ள ஹீரோ மோட்­டோகார்ப் நிறு­வ­னத்தி்ன் வாகன விற்­பனை, கணக்­கீட்டு மாதத்தில், 18 சத­வீதம் அதி­க­ரித்து, 5,29,215 என்ற எண்­ணிக்­கை­யி­லி­ருந்து, 6,25,420 ஆக வளர்ச்சி கண்­டுள்­ளது.
டி.வி.எஸ். மோட்டார்:சென்­னையைச் சேர்ந்த டி.வி.எஸ். மோட்டார் கம்­பெ­னியின், வாகன விற்­பனை, மதிப்­பீட்டு மாதத்தில், 3.92 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 1,97,905 ஆக அதி­க­ரித்­துள்­ளது. கடந்­தாண்டின் இதே மாதத்தில், இந்­நி­று­வ­னத்தின் வாகன விற்­பனை, 1,90,438 ஆக இருந்­தது.ஆக, மதிப்­பீட்டு மாதத்தில், இந்­நி­று­வ­னத்தின் இரு­சக்­கர வாகன விற்­பனை, 1.93 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 1,86,376 என்ற எண்­ணிக்­கை­யி­லி­ருந்து, 1,89,979 ஆக
அதி­க­ரித்­துள்­ளது.
மேலும், மோட்டார் சைக்கிள் விற்­ப­னையும், கணக்­கீட்டு மாதத்தில், 13.2 சத­வீதம் உயர்ந்து, 72,687லிருந்து, 82,352 ஆக அதி­க­ரித்­துள்­ளது. அதே­ச­மயம், ஸ்கூட்டர் விற்­பனை, 4.2 சத­வீதம் சரி­வ­டைந்து, 43,973 என்ற எண்­ணிக்­கை­யி­லி­ருந்து, 42,124 ஆக குறைந்­துள்­ளது.
மதிப்­பீட்டு மாதத்தில், இரு­சக்­கர வாகன ஏற்­று­மதி, 4 சத­வீதம் அதி­க­ரித்து, 16,103லிருந்து, 16,750 ஆக வளர்ச்சி கண்­டுள்­ளது.இந்­நி­று­வ­னத்தின் மூன்று சக்­கர வாகன விற்­பனை, 95.1 சத­வீதம் அதி­க­ரித்து, 4,062லிருந்து, 7,926 ஆக உயர்ந்­துள்­ளது.
சுசூகி மோட்டார் சைக்கிள்:சுசூகி மோட்டார் சைக்கிள் இந்­தியா நிறு­வ­னத்தின், வாகன விற்­பனை, சென்ற அக்­டோ­பரில், 9.26 சத­வீதம் உயர்ந்து, 39,562 ஆக அதி­க­ரித்­துள்­ளது.இது, கடந்­தாண்டு இதே மாதத்தில், 39,562 ஆக இருந்­தது.
யமஹா மோட்டார்:யமஹா மோட்டார் இந்­தியா, சென்ற அக்­டோ­பரில், 64,552 இரு­சக்­கர வாக­னங்­களை விற்­பனை செய்­துள்­ளது. இது, கடந்­தாண்டின் இதே மாதத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட விற்­ப­னையை (49,522) காட்­டிலும், 30 சத­வீதம் அதி­க­மாகும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)