பதிவு செய்த நாள்
02 நவ2013
01:16

புதுடில்லி:சென்ற ஜூலை – செப்., காலாண்டிற்கு, எரிபொருள் மானியமாக, 13,796 கோடி ரூபாய் வழங்கவேண்டும் என, ஓ.என்.ஜி.சி., நிறுவனத்திற்கு, மத்திய அரசு
உத்தரவிட்டுளளது.
பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம்
கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று நிறுவனங்கள், அடக்க விலைக்கும் குறைவாக, டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு
ஆகியவற்றை விற்பனை செய்கின்றன.இதனால், இந்நிறுவனங்களுக்கு ஏற்படும்
இழப்பிற்கு, மத்திய அரசு மானியம் வழங்குகிறது.
இத்துடன், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, பொதுத் துறையை சேர்ந்த, ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா, கெயில் ஆகிய நிறுவனங்களும், குறிப்பிட்ட சதவீத மானியம் வழங்குகின்றன.இந்த வகையில், நடப்பு நிதியாண்டின், இரண்டாவது
காலாண்டிற்கு, ஓ.என்.ஜி.சி., 13,796 கோடி ரூபாய், ஆயில் இந்தியா, 2,233 கோடி ரூபாய் மற்றும், கெயில், 700 கோடி ரூபாய் தர வேண்டும்.இதன்படி, மொத்தம், 16,729 கோடி ரூபாய் வழங்குமாறு,3 நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சகம், உத்தரவிட்டுளளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|