பதிவு செய்த நாள்
04 நவ2013
00:46
புதுடில்லி: நடப்பு 2013ம் ஆண்டில், இந்திய மருந்து துறையின் வளர்ச்சி, 9.8 சதவீதமாக சரிவடையும். கடந்த 2012ம் ஆண்டில், இத்துறையின் வளர்ச்சி, 16.6 சதவீதமாக இருந்தது என, இந்திய தொழிலக கூட்டமைப்பு மற்றும் பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் மருந்து சந்தை, 72,069 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.
புதிய மருந்து விலை கொள்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளின் கடும் நெறி முறைகளால், இந்திய மருந்து துறையின் வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகி உள்ளது.மத்திய அரசு, கடந்த ஆண்டு, தேசிய மருந்து விலை கொள்கையை அமல்படுத்தியது. இதையடுத்து, தேசிய அளவில், 348 மருந்துகள், அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டன.இந்த மருந்துகளுக்கு, புதிய விலை கொள்கை அமல்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக, சில்லரை வர்த்தகர்கள் மற்றும் மருந்து வினியோகஸ்தர்களின் லாப வரம்பு முறையே, 20 சதவீதத்திலிருந்து, 10 சதவீதமாகவும், 16 சதவீதத்திலிருந்து, 8 சதவீதமாகவும் குறைந்துள்ளது.லாப வரம்பு குறைந்து போனதால், மருந்து வினியோக நிறுவனங்களின் வர்த்தகம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதனால், ஒட்டு மொத்த அளவில், இந்திய மருந்து துறையின் வளர்ச்சி, நடப்பாண்டில், 9.8 சதவீதமாக சரிவடைய வாய்ப்புள்ளது என, இந்நிறுவனங்களின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையத்தின் கடுமையான நெறிமுறைகளால், இந்திய மருந்து நிறுவனங்களின் செயல்பாடும், ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|