பதிவு செய்த நாள்
04 நவ2013
00:47

புதுடில்லி: சென்ற செப்டம்பர் மாதத்தில், முன்னுரிமை பங்கு வெளியீடு வாயிலாக, நிறுவனங்கள் திரட்டிய தொகை, கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு, 926 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.இது, இதற்கு முந்தைய ஆகஸ்ட் மாதத்தில், 1,062 கோடி ரூபாயாக இருந்தது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கீட்டு மாதத்தில், நாட்டின் பங்கு வர்த்தகம் அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்ததால், முன்னுரிமை பங்கு வெளியீடுகள் வாயிலாக திரட்டிய தொகை குறைந்துள்ளது.மேலும், சென்ற செப்டம்பர் மாதத்தில், 32 முன்னுரிமை பங்கு வெளியீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இது, இதற்கு முந்தைய மாதத்தில், 35 ஆக இருந்தது.நிறுவனங்கள், அவற்றின் நிதி ஆதாரத்தை திரட்டிக் கொள்ள நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு, முன்னுரிமை பங்குகளை ஒதுக்கீடு செய்கின்றன.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், 220 முன்னுரிமை பங்கு வெளியீடுகள் வாயிலாக நிறுவனங்கள், 31,486 கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளன.கடந்த 2012–13ம் நிதியாண்டில், இவ்வகையில் மேற்கண்ட பங்கு வெளியீடுகள் வாயிலாக, நிறுவனங்கள், 47 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டி கொண்டன. இது, கடந்த 2011–12ம் நிதியாண்டில், 25,709 கோடி ரூபாயாகவும், 2010–11ம் நிதியாண்டில், 30,511 கோடி ரூபாயாகவும் இருந்தது என, ‘செபி’ தெரிவித்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|