பதிவு செய்த நாள்
04 நவ2013
00:49

கம்பம்,: கவுதமாலா நாட்டு ஏலக்காய், குறைந்த விலைக்கு கிடைப்பதால், இந்திய ஏலக்காய் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.சர்வதேச அளவில், கவுதமாலா, இந்தியா ஆகிய நாடுகளில், அதிக பரப்பளவில், ஏலக்காய் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கவுதமாலா நாட்டில் மானாவாரியில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது; பராமரிப்பு செலவுகள் கிடையாது. எனவே கிடைத்த அளவிற்கு லாபம் என்று விலையை குறைத்து விற்கின்றனர்.இந்தியாவில் கேரளா, தமிழகம், கர்நாடகாவில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது.
கேரளாவில் மட்டும், 90 சதவீதம் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.அளவு, மணம், நிறம் போன்றவற்றால், சர்வதேச சந்தையில், இந்திய ஏலக்காய்க்கு மவுசு அதிகம் உள்ளது. கேரளாவில், 1 ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்ய, 1.50 லட்சம் ரூபாய் வரை, செலவு செய்கின்றனர். இதில், சராசரியாக, 300 கிலோ ஏலக்காய் கிடைக்கிறது. 1 கிலோவிற்கு சராசரியாக, 800 ரூபாய் கிடைத்தால் தான், விவசாயிகள் லாபம் பார்க்க முடியும்.தற்போது, சராசரி விலை கிலோவிற்கு, 560 முதல் 580 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. இதனால், ஏலக்காய் விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர்.இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:இந்த ஆண்டு ஏலக்காய் ஏற்றுமதி குறைந்து விட்டது.
இந்திய ஏலக்காய் ஏற்றுமதியில், வளைகுடா நாடுகளின் பங்களிப்பு, 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதிகம் வாங்குவதில்லை. பொதுவாக, ஆண்டுதோறும் இந்திய ஏலக்காய்க்கு கவுதமாலா ஏலக்காய் போட்டியாக வரும்.அந்த போட்டி, ஜனவரிக்கு பிறகே இருக்கும். ஆனால், இந்த ஆண்டு ஏற்றுமதியாளர்கள், கவுதமாலா ஏலக்காய் குறைந்த விலைக்கு ‘ஆர்டர்’ கிடைப்பதாக கூறி, பேரம் பேசுகின்றனர். அதாவது, இன்னும் இரு மாதங்கள் கழித்து வர இருக்கும் ஏலக்காய்க்கு, இப்போதே ‘ஆர்டர்’ கிடைத்திருப்பதாக கூறி, எங்களிடம், விலையை குறைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|