பதிவு செய்த நாள்
04 நவ2013
11:02

தீபாவளியை முன்னிட்டு, "டாஸ்மாக்' கடைகளில், 154 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகி உள்ளன.தமிழகத்தில், சென்னை மண்டலம், 1,085; கோவை, 954; மதுரை, 1,752; சேலம், 1,336; திருச்சி மண்டலம், 1,711 என, மொத்தம், 6,838 "டாஸ்மாக்' கடைகள் உள்ளன. இந்த கடைகளில், நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய் மதிப்பிற்கு, அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில், மதுபானங்கள் விற்பனையாகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளில், 150 கோடி ரூபாய் மதி"ப்பிலான, மது வகைகள் விற்பனையாகும் என, எதிர்பார்க்கப்பட்டது. இதனால், 12 நாட்களுக்கு தேவையான மது வகைகள், கடைகளில் முன்கூட்டியே இருப்பு வைக்கப்பட்டன. எதிர்பார்த்தது போலவே, இலக்கைத் தாண்டி நேற்று முன்தினம், தீபாவளி அன்று மட்டும், 154 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகியுள்ளன. இது, கடந்த ஆண்டு விற்பனையை விட, 22 சதவீதம் (126 கோடி ரூபாய்) அதிகம். "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்தது. இனி பண்டிகை நாட்கள் என்று முன்கூட்டியே சரக்குஇருப்பு முறையாக வைத்தால், அது இலக்கை தாண்டி விற்கப்படலாம் என்பதற்கு இது ஓர் உதாரணமாகி உள்ளது.
இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறுகையில், "வாடிக்கையாளர்கள், அதிகம் வாங்கும்," சரக்கு'களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, அவற்றை முன் கூட்டியே கொள்முதல் செய்து, இருப்பு வைத்ததே, விற்பனை அதிகரிப்பு காரணம்' என்றார். அதே சமயம், தமிழகத்தில் பணப் பற்றாக்குறை என்பது மது குடிப்பவர்கள் பிரச்னையாக சிறிதும் இல்லை என்பதையும் இது காட்டுகிறது. அல்சா மாலில் விற்பனை அமோகம்!உயர் வருவாய் பிரிவினருக்காக திறக்கப்பட்டுள்ள, சென்னை,அல்சா மால் ஷாப்பிங் காம்ப்ளக்சில் உள்ள, "டாஸ்மாக்' கடையில், தீபாவளிக்கு முந்தைய தினம் (வெள்ளிக்கிழமை) 8 லட்சம் ரூபாய்க்கு, மதுபானம் விற்பனையாகி உள்ளது. தீபாவளிக்கு, 'ஷாப்பிங் மால்' விடுமுறை என்பதால், "டாஸ்மாக்' கடை மட்டும் இயங்கியது.அன்றைய தினம், 5 லட்சம் ரூபாய் என, இரு தினங்களில் மட்டும், 13 லட்சம் ரூபாய்க்கு மதுபானம் இங்கே விற்பனையாகி உள்ளது.
நமது நிருபர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|