பதிவு செய்த நாள்
04 நவ2013
11:09

மதுரை:கூட்டுறவு வங்கிகளில் மூன்று அடுக்கு முறை பணப் பரிமாற்றத்தால், சொஸைட்டிகளில் 14.50 சதவீத வட்டிக்கு, நகைக்கடன் வழங்கப்படுகிறது. மத்திய அரசு மனது வைத்து, சொஸைட்டிகளுக்கு நேரடியாக கடன் வழங்கினால், நகைக்கடன் வட்டி குறையும்.
விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டி:நபார்டு வங்கி மூலம், மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு 4.20 சதவீத வட்டியில் பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. அங்கிருந்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு 4.50 சதவீதத்திலும், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு (சொஸைட்டி) 5.20 சதவீதத்திலும் கடன் தரப்படுகிறது. கடைசியாக விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டி நிர்ணயிக்கப்படுகிறது.நகைக் கடனைப் பொறுத்த வரை, நபார்டு வங்கி 10 சதவீத வட்டியில், மாநில கூட்டுறவு வங்கிக்கு கடன் தருகிறது. அங்கிருந்து 11 சதவீத வட்டியில் மாவட்ட கூட்டுறவு வங்கிக்கும், 11.75 சதவீத வட்டியில் சொஸைட்டிக்கும் கடன் கிடைக்கிறது. சொஸைட்டிகளில், பொதுமக்களிடம் நகைக்கடனுக்கு 14.50 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது.
மாநிலம், மாவட்டம், சொஸைட்டி என மூன்றடுக்கு முறையால், பொதுமக்கள் தலையில், வட்டி அதிகமாக சுமத்தப்படுகிறது. கேட்கப்படும் கடனுக்கு மேல், பல மடங்கு மதிப்புள்ள நகைகள், மாநில வங்கியின் அடகுக்கணக்கில் இருக்கின்றதா என்பதை, நபார்டு வங்கி நேரடியாக ஆய்வு செய்தபின்பே, கடன் வழங்கும். வங்கிக்குச் சொந்தமான சொத்துப் பத்திரங்களின் மேல் தான், நபார்டு வங்கி கடன் வழங்கும்.
தமிழகத்தில் 4,500 சொஸைட்டிகள் உள்ளன. இதில் நஷ்டத்தில் இயங்கும் சொஸைட்டிகள் கூட, நகைக் கடன் வழங்குகின்றன. பெரும்பாலான சொஸைட்டிகளுக்கு நிறைய சொத்துக்கள் உள்ளன. எனவே சொத்துப் பத்திரம் மற்றும் அடமான நகைகளின் பேரில், நபார்டு வங்கி, சொஸைட்டி களுக்கு நேரடியாக கடன் வழங்கினால் வட்டி குறையும். உதாரண மாக நபார்டு வங்கி 10 சதவீத வட்டியில் கடன் வழங்கினால், சொஸைட்டி 11 சதவீத வட்டியில் பொதுமக்களுக்கு நகைக்கடன் தர முடியும். இதனால், 3.5 சதவீத வட்டி குறையும் என்பதால், எளிதில் நகைகளை மீட்க முடியும்.
பெரும்பாலான தேசிய வங்கிகளில் ஒரு சவரனுக்கு குறைவான நகைகளையும், இன்னும் சில தேசிய வங்கிகள், ஐந்து சவரனுக்கு குறைவான நகைகளை அடகுவைக்க அனுமதிப்பதில்லை. எனவே, ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தனியார் நிறுவனங்களில் கூடுதல் வட்டிக்கு நகையை அடகு வைக்கின்றனர்.
வட்டி குறையுமா?ஆனால் சொஸைட்டிகளில் அரை கிராம் நகையை அடகுவைத்தாலும், பணம் தருகின்றனர். வட்டியை குறைத்தால், கடன் வைப்பவர்களும் அதிகரிப்பர். அடித்தட்டு மக்களின் நாதமாக விளங்கும் சொஸைட்டிக்கு நேரடியாக கடன் வழங்க, மத்திய அரசு மனது வைத்தால், ஏழைகள் பயன்பெறுவர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|