பதிவு செய்த நாள்
09 நவ2013
22:08
டாடா மோட்டார்ஸ் புராஜெக்ட் பால்கன் என்ற திட்டத்தின் மூலமாக புதிய மாடல் கார்களை
அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படையில் முதலில் 2 புதிய கார் மாடல்களை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய உள்ளது. விஸ்டா அடிப்படையிலான புதிய ஹேட்ச்பேக் காரும், மான்ஸா அடிப்படையிலான செடான் காரும்தான் முதலாவதாக வர இருக்கின்றன. விஸ்டா, மான்ஸா கார்களுக்கு மாற்றாக இந்த புதிய கார்கள் நிலைநிறுத்தப்பட உள்ளன. மேலும், டிசைனில் சிறிய வித்தியாசங்களுடன் இந்த கார்கள் வர இருப்பதாக டாடா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பால்கன் 4 என்ற குறியீட்டு பெயரில் புதிய ஹேட்ச்பேக் கார் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸீட்டா காரில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஃபியட்டின் 1.3 லி மல்டிஜெட் எஞ்சினுடன் இந்த புதிய கார் வர இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஐரோப்பிய டிசைன் மையத்தில்தான் புதிய பால்கன் 4 ஹேட்ச்பேக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, ஐரோப்பிய மார்க்கெட்டில் உலவும் ஹேட்ச்பேக் கார்களின் டிசைன் தாத்பரியம் இந்த புதிய காரிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் என தெரிகிறது.டில்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய கார்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. அடுத்த ஆண்டு பண்டிகை காலத்துக்கு முன்னதாக முதலில் செடான் காரும், அடுத்து ஹேட்ச்பேக் காரும் வர இருக்கிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|