பதிவு செய்த நாள்
10 நவ2013
00:37

சென்னை:தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுள் ஒன்றான இந்தியன் பேங்க், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், 306 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 497 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது. ஆக, மதிப்பீட்டு காலாண்டில், வங்கியின் நிகர லாபம், 38.40 சதவீதம் சரிவடைந்துஉள்ளதாக, இவ்வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டி.எம்.பாசின் தெரிவித்தார்.கணக்கீட்டு காலாண்டில், வங்கியின் மொத்த வருவாய், 3,774 கோடியிலிருந்து, 4,078 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
வங்கியின் மொத்த வசூலாகாத கடன், 3.76 சதவீதம் என்ற அளவிலும், நிகர வசூலாகாத கடன், 2.56 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது.வங்கியின் மூலதன இருப்பு விகிதம், செப்டம்பர் இறுதி வரையிலுமாக, 13.27 சதவீதம் என்ற அளவில் உள்ளது. செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், வங்கியின் நிகர லாபம், 35 சதவீதம் சரிவடைந்து, 958 கோடியிலிருந்து, 623 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
அதேசமயம், இதே காலத்தில், வங்கியின் மொத்த வருவாய், 7,370 கோடியிலிருந்து, 8,273 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.வங்கியின் மொத்த வணிகம், 16.1 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,63,758 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. இதில் திரட்டப்பட்ட டெபாசிட், 16.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,52,687 கோடி ரூபாயாகவும், வழங்கப்பட்ட கடன், 15.8 சதவீதம் உயர்ந்து, 1,11,071 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது என, பாசின் மேலும் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|