பதிவு செய்த நாள்
10 நவ2013
00:38

சென்னை:கடந்த வாரத்தில் மட்டும், ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 56 ரூபாய் உயர்ந்துள்ளது.சர்வதேச அளவில், தங்கம் விலை குறைந்துள்ளதால், உள்நாட்டில், இதன் விலையில், பெரிய அளவிற்கு மாறுதல் இல்லை.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,861 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,888 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 30,295 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று, தங்கம் விலை, கிராமுக்கு, மூன்று ரூபாய் குறைந்து, 2,858 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 24 ரூபாய் சரிவடைந்து, 22,864 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 30 ரூபாய் குறைந்து, 30,265 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 51.80 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 48,410 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.கடந்த திங்களன்று (4ம் தேதி), ஒரு கிராம் தங்கம், 2,851 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,808 ரூபாய்க்கும் விற்பனையானது. ஆக, கடந்த வாரத்தில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, ஏழு ரூபாயும், சவரனுக்கு, 56 ரூபாயும் உயர்ந்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|