பதிவு செய்த நாள்
11 நவ2013
00:30

மும்பை:நாட்டில் நிலவும் பொருளாதார சுணக்க நிலையால், இந்திய ரியல் எஸ்டேட் துறையில், தொடர்ந்து மந்த நிலை காணப்படுகிறது. குறிப்பாக, நடப்பு நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரை யிலான இரண்டாவது காலாண்டில், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்து உள்ளது.மும்பை:இதையடுத்து, ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் வீடுகள் விற்பனை அதிகளவில் தேக்கமடைந்து உள்ளது என, இத்துறை ஆய்வு நிறுவனமான லியாசஸ் போரஸ் தெரிவித்து உள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், மும்பை மாநகர் பகுதிகளில், 58 மாதங்களில் இல்லாத அளவிற்கும், டில்லி தலைநகர் பகுதிகளில், 41 மாதங்களில் இல்லாத அளவிற்கும், வீடுகள் விற்பனை தேக்கமடைந்து உள்ளன.
இவை தவிர, புனே மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களிலும், வீடுகள் விற்பனை முறையே, கடந்த, 31 மற்றும் 30 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துஉள்ளது.கணக்கீட்டு காலாண்டில், மும்பை, டில்லி, புனே, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் சென்னை ஆகிய முக்கிய ஆறு நகரங்களில், 7,112 லட்சம் சதுர அடி பரப்பிலான அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்து உள்ளன.இதில், டில்லி தலைநகர் பகுதி களில் மட்டும் மிகவும் அதிகபட்சமாக, 2,871 லட்சம் சதுர அடி பரப்பிலான குடியிருப்புகள், விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதைத் தொடர்ந்து, மும்பை மாநகர் பகுதிகள் (1,506 லட்சம் சதுர அடி), பெங்களூரு (1,108.50 லட்சம் சதுர அடி) ஆகியவை உள்ளன.புனே மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில், ரியல் எஸ்டேட் துறை தொடர்ந்து சுணக்கமாகவே உள்ளது.இருப்பினும், சென்னை மற்றும் ஐதராபாத் நகரங்களில், இத்துறையில் சற்று முன்னேற்றம் தென்படுகிறது என, லியாசஸ் போரஸ் ஆய்வு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பங்கஜ் கபூர் தெரிவித்தார்.
சென்னை:மதிப்பீட்டு காலாண்டில், சென்னையில், 79 லட்சம் சதுர அடி பரப்பளவிலான அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனையாகி உள்ளன. இது, கடந்த நிதியாண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், 19 சதவீதம் அதிகம். இதே போன்று, குடியிருப்புகளின் விலையும் கடந்த நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், 11 சதவீதம் அதிகரித்து, சராசரியாக, 4,776 ரூபாயாக (1 சதுர அடி) உயர்ந்துள்ளது.ஐதராபாத் நகரிலும், வீடுகள் விற்பனை, 3 சதவீதம் உயர்ந்து, 41.9 லட்சம் சதுர அடியாக வளர்ச்சி கண்டுள்ளது. இதே போன்று, ௧ சதுர அடியின் விலையும், 10 சதவீதம் உயர்ந்து, 3,648 ரூபாயாக அதிகரித்துள்ளது என, அவர் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|