உச்சத்தில் தங்கம் விலை1 சவரன் ரூ.23 ஆயிரம்உச்சத்தில் தங்கம் விலை1 சவரன் ரூ.23 ஆயிரம் ... பொருளாதார வளர்ச்சி மீண்டும்8 சதவீதத்தை எட்டும் – மான்டேக் பொருளாதார வளர்ச்சி மீண்டும்8 சதவீதத்தை எட்டும் – மான்டேக் ...
தொழில்துறை உற்பத்தி 2 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2013
00:29

புதுடில்லி: நாட்டின் தொழில்துறை உற்பத்தி, சென்ற செப்டம்பர் மாதத்தில், 2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், மைனஸ், 0.7 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டிருந்தது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, 0.4 சதவீதம் என்ற அளவில் உள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 0.1 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது.மின் துறையின் உற்பத்தி வளர்ச்சி, சென்ற செப்டம்பரில், 12.9 சதவீதமாகவும், நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், 5.9 சதவீதமாகவும் இருந்தது. அதேசமயம், கடந்தாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, 4.6 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
சென்ற செப்டம்பரில், சுரங்க துறையின் உற்பத்தி வளர்ச்சி, 3.3 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 2.2 சதவீதம் என்ற அளவில் இருந்தது.சென்ற செப்டம்பரில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி , 0.6 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டு செப்டம்பரில், மைனஸ் 1.6 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டிருந்தது.
பொறியியல் துறையின் உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், மைனஸ் 0.7 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில், மைனஸ் 14.2 சதவீதம் என்ற அளவில் மிகவும் பின்னடைந்து காணப்பட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)