பதிவு செய்த நாள்
16 நவ2013
00:18

சென்னை:'வேளாண் விளை பொருட்களுக்கு அளிக்கப்படும் அடமான கடனுக்கு, மத்திய அரசின் வட்டி குறைப்பு சலுகை நடப்பு நிதியாண்டிலும் தொடரும் என, நபார்டு வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்து, வங்கியின் தலைமை பொதுமேலாளர், லலிதா வெங்கடேசன் கூறியதாவது:பொதுத் துறை மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம், பயிர் கடன் பெற்றுள்ள விவசாயிகள், விளைபொருள்களை சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து, சந்தை விலைக்கு ஏற்ப விற்பனை செய்யலாம். கடந்தாண்டு சேமிப்புக் கிடங்குகளில் சேமிக்கப்பட்டுள்ள விளை பொருள்கள் மீது, 3 லட்சம் ரூபாய் வரையில் கடன் வழங்கப்பட்டது.
ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு, 7 சதவீத வட்டி என நிர்ணயிக்கப் பட்டது. கூட்டுறவு வங்கிகள் மூலம் அளிக்கப்படும் இக்கடனுக்காக, 4.5 சதவீத வட்டியில் மறு நிதியை, நபார்டு வங்கி அளித்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|