பதிவு செய்த நாள்
16 நவ2013
00:22

மும்பை:சென்ற செப்டம்பருடன் முடிந்த, முதல் அரையாண்டில், ஆயுள் காப்பீட்டு துறை நிறுவனங்களின்,முதலாண்டு பிரிமியம் வசூல், 6.6 சதவீதம் அதிகரித்து, 59,057 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, காணப்படும் வளர்ச்சியாகும்.
சென்ற நிதியாண்டின், இதே காலத்தில்,ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமியம் வசூல், 46,963 கோடி ரூபாயாக இருந்தது.மதிப்பீட்டு காலத்தில், லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின், முதலாண்டு பிரிமியம், 7.25 சதவீதம் வளர்ச்சி கண்டு, 37,906 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.அடுத்த இடத்தில் உள்ள, தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் முதலாண்டு பிரிமியம், 4.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 12,151 கோடி ரூபாயாக உள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பரில், யூனிட் சார்ந்த காப்பீட்டு திட்டங்களுக்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இத்துடன், காப்பீட்டு
முகவர்களின் தரகு கட்டணம் குறைப்பு, முதிர்வுக்கான காலவரை நீட்டிப்பு போன்றவற்றால், காப்பீட்டு துறையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம், பாரம்பரிய காப்பீடுகளை, புதிய வடிவமைப்புடன் வெளியிடுவதற்கான விதிமுறைகளை வெளியிட்டது.இதனை, பல காப்பீட்டு நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. இதனால், முகவர்கள் மற்றும் வங்கிகள், அதிக அளவில், ஆயுள் காப்பீட்டு திட்டங்களை வினியோகம் செய்யத் துவங்கியுள்ளன. இத்தகைய போக்கால், ஆயுள் காப்பீட்டு துறை, மீண்டும் எழுச்சி காணத் துவங்கியுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|