பதிவு செய்த நாள்
16 நவ2013
00:35

மும்பை:சென்ற அக்டோபரில், பரஸ்பர நிதி திட்டங்களில், முதலீட்டாளர்கள், நிகர அளவில், 66,326 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். அதே சமயம், இதே மாதத்தில், கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து, முதலீட்டாளர்கள் அதிக தொகையை திரும்பப் பெற்றுள்ளனர்.
இது குறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் கூட்டமைப்பு (ஆம்பி) வெளியிட்டுள்ள அறிக்கை:பங்கு சார்ந்த திட்டங்கள்:சென்ற அக்டோபரில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து, முதலீட்டாளர்கள், 3,225 கோடி ரூபாயை திரும்பப் பெற்றுள்ளனர்.இது, இதற்கு முந்தைய, செப்டம்பர் மாதத்தில், நிகர அளவில, முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்ற தொகையை விட, 50 சதவீதம் அதிகமாகும்.
நடப்பு நிதியாண்டில், சென்ற அக்டோபருடன் முடிவடைந்த அரையாண்டில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து, நிகர அளவில, 2,116 கோடி ரூபாயை, முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர்.
இதே மாதத்தில், மும்பை பங்குசந்தையின் குறியீட்டுஎண் 'சென்செக்ஸ்' 21 ஆயிரம் புள்ளிகளைஎட்டும் நிலைக்கு உயர்ந்தது. இதனால் பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலைஉயர்ந்தது.இந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்த பல முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து வெளியேறினர்.
அதேசமயம், இதே மாதத்தில்,பரஸ்பர நிதிநிறுவனங்கள் நிர்வகிக்கும், பங்கு சார்ந்த பரஸ்பர திட்டங்களின் மதிப்பு, 6 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து, 1.49 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்தில், 1.40 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இதனிடையே, தங்கம் சார்ந்த பரஸ்பரநிதி திட்டங்களில் இருந்தும், அதிக அளவில் முதலீடு கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. தங்கம் விலை உயர்ந்து வருவதால், ஆதாயம் கருதி, முதலீட்டாளர்கள், தங்கள் முதலீடுகளை, இவ்வகை திட்டங்களில் இருந்து எடுத்து வருகின்றனர்.
கோல்டு ஈ.டி.எப்.,சென்ற அக்டோபர்மாதம், கோல்டு ஈ.டி.எப்., திட்டங்களில் இருந்து, நிகர அளவில், 288 கோடிரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதேமாதத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், கோல்டுஈ.டி.எப்., திட்டங்களின்கீழ், நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு, 9,894 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
நடப்புநிதியாண்டில்,சென்றஅக்டோபர்வரை, கோல்டு ஈ.டி.எப்., திட்டங்களில் இருந்து, 1,514 கோடி ரூபாய் நிகர முதலீடு திரும்ப பெறப்பட்டுள்ளது.அதேசமயம், இதே காலத்தில், லிக்யுட் மற்றும் நிதிசந்தை சார்ந்த திட்டங்களில், மேற்கொள்ளப்பட்ட நிகர முதலீடு, முறையே, 67,515 கோடி மற்றும் 88,466 கோடி ரூபாயாக இருந்தது.
சென்றஅக்டோபர் நிலவரப்படி,மேற்கண்ட பிரிவின் கீழ், பரஸ்பரநிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, முந்தைய மாதத்தை விட, 54 சதவீதம் அதிகரித்து, 1.89 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|