பதிவு செய்த நாள்
16 நவ2013
00:53

புதுடில்லி:நடப்பு 2013–14ம் நிதிஆண்டில், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான, ஏழு மாத காலத்தில், நாட்டின் முன்பேர சந்தைகளில் வர்த்தகம், 30 சதவீதம் சரிவடைந்து, 71,60,163 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
வேளாண் பொருட்கள்:கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், முன்பேர சந்தைகளில் வர்த்தகம், 101,55,637 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது என, பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.,) தெரிவித்துள்ளது.
மத்திய அரசு, கடந்த ஜூலை 1ம் தேதி முதல், வேளாண் சாராத பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் மீது, 0.01 சதவீதம் முன்பேர பொருள் பரிவர்த்தனை வரி (சி.டி.டி.,) விதித்தது.இதன்காரணமாகவே, முன்பேர சந்தைகளில் வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனை எடுத்துக்காட்டும் விதமாக, கணக்கீட்டு காலத்தில், முன்பேர சந்தைகளில், வேளாண் பொருட்கள் மீதான வர்த்தகம், 36 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 8,82,209 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 13,81,550 கோடி ரூபாயாக உயர்ந்து காணப்பட்டது.இதே போன்று, தங்கம் மற்றும் வெள்ளி மீதான வர்த்தகமும், 31 சதவீதம் சரிவு அடைந்து, 46,48,534 கோடி ரூபாயிலிருந்து, 32,17,715 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.மேலும்,இதர உலோகங்கள் மீதான வர்த்தகமும், 30 சதவீதம்குறைந்து, 18,73,645 கோடியிலிருந்து, 13,11,921 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
கச்சா எண்ணெய்: மேற்கண்டவை தவிர, கச்சாஎண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் மீதான வர்த்தகமும், 22 சதவீதம் குறைந்து, 22,51,906 கோடியிலிருந்து, 17,48,317 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது என, எப்.எம்.சி., மேலும் தெரிவித்து உள்ளது.தேசிய அளவில், எம்.சி.எக்ஸ்., என்.சி.டீ.இ.எக்ஸ்., உள்ளிட்ட 6 முன்பேர சந்தைகளும், மண்டல அளவில், 11 சந்தைகளும் செயல்பட்டு வருகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|