பதிவு செய்த நாள்
16 நவ2013
00:56

நடப்பு 2013-14ம் நிதிஆண்டில், நாட்டின் காபி உற்பத்தி, 9 சதவீதம் அதிகரித்து, 3.47 லட்சம் டன்னாக உயரும் என, கர்நாடகா தோட்டப் பயிர் கூட்டமைப்பு (கே.பி.ஏ.,) மதிப்பீடு செய்துள்ளது.
இது குறித்து இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:சென்ற 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் காபி உற்பத்தி, 3.18 லட்சம் டன்னாக இருந்தது. காபி
உற்பத்தியாளர்கள், பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் நிலையிலும், நடப்பு நிதியாண்டில், கூடுதலாக, 29 ஆயிரம் டன் காபி உற்பத்தியாகும் என, தெரிகிறது.
நாட்டின் மொத்த காபி உற்பத்தியில், 75 சதவீத பங்களிப்பை, கே.பி.ஏ., வழங்கி வருகிறது.நடப்பு நிதியாண்டில், அரபிகா வகை காபி உற்பத்தி, 12.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.11 லட்சம் டன்னாக உயரும். அதே போன்று, ரோபஸ்டா வகை காபி உற்பத்தி, 7.5 சதவீதம் அதிகரித்து, 2.36 லட்சம்டன்னாக உயரும் என, காபி வாரியம் மதிப்பிட்டுள்ளது.
ஒரு ஹெக்டேருக்கான காபி உற்பத்தி, 850 கிலோவில் இருந்து, 748 கிலோவாக குறைந்துள்ளது. இருந்த போதிலும், நாட்டின் காபி உற்பத்தி, அதிகரித்து வருகிறது. இந்தியாவை விட, வியட்னாம், 2.6 மடங்கும், பிரேசில், 1.5 மடங்கும் காபி உற்பத்தி செய்கின்றன.இந்தியாவில், காபி பயிர்கள், பூச்சித்தாக்குதலை சமாளித்து,
அதிகபட்ச உற்பத்தியை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை, கே.பி.ஏ., எடுத்து வருகிறது. இதற்காக, பிரேசில் காபி துறையில் நிபுணத்துவம் பெற்ற இரண்டு பேருடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள், காபி உற்பத்தி திறனை அதிகரிக்க தேவையானஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும், இந்திய விவசாயிகளுக்கு வழங்குவார்கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|