பதிவு செய்த நாள்
16 நவ2013
15:30

சிவகங்கை : வெங்காய விலை அதிகரித்து வருவதால், கூடுதலாக, 12 ஆயிரம் ஏக்கரில், விவசாயிகளை வெங்காயம் பயிரிட வைக்க, மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. அதற்காக, பலவிதமான மானிய உதவிகளை வழங்கவும் தீர்மானித்து உள்ளது.
திருநெல்வேலி, அரியலூர் உட்பட பல மாவட்டங்களில், 70 ஆயிரம் ஏக்கரில், ஆண்டுதோறும் வெங்காயம் பயிரிடப்படுகிறது. இவற்றில், 2.4 ஏக்கருக்கு, எட்டு டன் வெங்காயம் உற்பத்தியாகிறது. தற்போது, நாட்டின் பல பகுதிகளில், வெங்காய விளைச்சல் குறைந்து, விலை அதிகரித்து பெரிய வெங்காயம், கிலோ, 60 முதல், 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதனால், வரும் காலங்களில் தமிழகத்தில், வெங்காய பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க, நடப்பாண்டில், வெங்காயம் பயிரிடும் பரப்பளவை, 12 ஆயிரம் ஏக்கர் வரை அதிகரிக்க, மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. சென்னையில், சமீபத்தில் நடந்த தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூட்டத்தில், இதுதொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.
வெங்காயம் பயிரிடுவதை விவசாயிகள் விரும்பிச் செய்யும் வகையில், அவர்களை ஊக்கப்படுத்த, தரமான விதைகள், உரம், இடுபொருட்கள் மற்றும் சொட்டு நீர் பாசன கருவி போன்றவற்றை, மானிய விலையில் வழங்கவும், மத்திய அரசின் தேசிய தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், வேறு பல உதவிகளை வழங்கவும், மாநில அரசு தீர்மானித்து உள்ளது. இதுதொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என, தமிழக தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|