பதிவு செய்த நாள்
16 நவ2013
15:36

நத்தம்:திண்டுக்கல், நத்தம் பகுதியில் மழை இல்லாததால், புளி மகசூல் குறைந்துள்ளது. எனினும், வெளி மாநில புளி வரத்தால், விலை குறைந்துள்ளது. தேனி, விருதுநகர், தாராபுரம், வெள்ளக்கோவிலை போல நத்தம், சாணார்பட்டி பகுதிகளில் புளி விளைச்சல் அதிகம். நத்தம், சாணார்பட்டி, செங்குறிச்சி உள்ளிட்ட இடங்களில், 10 ஆயிரம் ஏக்கரில் புளியமரங்கள் உள்ளன. இப்பகுதியில், புளியில் விதை எடுத்து பதப்படுத்தும் தொழிலில், 3000 பேர் உள்ளனர். புளி விலையை நிர்ணயம் செய்யும் சந்தைகளில், நத்தம் முக்கியமானது. இந்த ஆண்டு, விளைச்சல் குறைந்ததால், புளி விலை உயரும் என, கருதப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டின் இருப்பு மற்றும் ஆந்திரா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் இருந்து, புளி வரத்து உள்ளது; இதனால், விலை குறைந்துள்ளது.விதைப்புளி, ஒரு கிலோ ரூ.22 முதல் ரூ.25க்கும்; விதை எடுத்தது, ரூ.50 முதல் ரூ.55க்கும் விற்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|