பதிவு செய்த நாள்
16 நவ2013
15:40

புதுடில்லி :சர்க்கரை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை, மத்திய அரசு தளர்த்தியுள்ளது.இது குறித்து, வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: உள்நாட்டில், சர்க்கரை உற்பத்தி தேவையை விட, அதிகமாக உள்ளது. இைத கருத்தில் கொண்டு, ஒரு தனிநபருக்கான ஏற்றுமதி வரம்பு, 25 ஆயிரம் டன்னிலிருந்து, 50 ஆயிரம் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஒரு ஏற்றுமதியாளர், அதிகபட்சமாக, 50 ஆயிரம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் சர்க்கரை உற்பத்தியில் இந்தியா, இரண்டாவது இடத்தில் உள்ளது. நடப்பு 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.50 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.அதே சமயம, உள்நாட்டில் சர்க்கரைக்கான தேவை, 2.30 கோடி டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சர்க்கரைக்கான ஏற்றுமதி வரம்பை உயர்த்த வேண்டும் என, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு வலியுறுத்தி வந்தது.இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, சர்க்கரைக்கான ஏற்றுமதி வரம்பு, தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
சென்ற 2012 - 13ம் ஆண்டில் சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்., - செப்.,), நாட்டின் சர்க்கரை ஏற்றுமதி, 3.25 லட்சம் டன்னாக இருந்தது. இது, நடப்பு 2013 - 14ம் பருவத்தில், 3 - 4 லட்சம் டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் அபினாஸ் வர்மா கூறுகையில், ' அரசின் இந்த முடிவு வரவேற்க கூடியது. என்றாலும், ஏற்றுமதிக்கான பதிவு முறையை முற்றிலுமாக நீக்க வேண்டும். அப்போது தான், சர்க்கரை ஏற்றுமதி, சிறப்பான அளவில் அதிகரிக்கும்' என்று தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|