பதிவு செய்த நாள்
17 நவ2013
00:06

ஊட்டி:நாட்டின் ஏற்றுமதி வர்த்தகம் கை கொடுக்காததால், குன்னுார் ஏல மையத்தில், தேயிலை விற்பனை தொடர்ந்து தேக்கம் கண்டு வருகிறது.பாகிஸ்தான்நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை துாள் வாரந்தோறும், வியாழன், வெள்ளி கிழமைகளில், குன்னுார் தேயிலை வர்த்தகர் சங்க ஏல மையத்தில் விற்கப்படுகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் தேயிலை துாள், உள்நாட்டு தேவை போக, பாகிஸ்தான், ரஷ்யா, ஈராக், கிழக்காசிய நாடுகள் என, பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக, உள்நாடு மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் திருப்தியாக இல்லை. நீலகிரி தேயிலை துாளை, அதிக அளவில் வாங்கி வந்த பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள், கடந்த ஒரு மாதமாக, தங்களின் வர்த்தகத்தை குறைத்து கொண்டுள்ளனர்; வாரந்தோறும் மிகக் குறைந்த அளவு தேயிலை துாளையே கொள்முதல் செய்கின்றனர்.கோல்கட்டா:உள்நாட்டு வர்த்தகத்தை பொறுத்தவரை, வடமாநில வர்த்தகர்கள் சிலிகுரி, கோல்கட்டா தேயிலை ஏல மையங்களில், அதிகளவு தேயிலை துாளை வாங்கி கொள்கின்றனர்.இக்காரணங்களால், குன்னுார் தேயிலை ஏல மையத்தில், வாரந் தோறும் தேயிலை துாள் தேக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டின், 45வது ஏலம், குன்னுார் ஏல மையத்தில் நடந்தது. மொத்தம், 19.61 லட்சம் கிலோ தேயிலை துாள் விற்பனைக்கு வந்தது; இதில், இலை ரகம், 13.21 லட்சம் கிலோ, டஸ்ட் ரகம், 6.40 லட்சம் கிலோவும் அடங்கும். இதில், 23 சதவீத தேயிலை துாள் விற்பனையாகாமல் தேங்கியது; விற்கப்பட்ட தேயிலை துாளின் விலையும், கிலோவுக்கு 3 ரூபாய் வரை வீழ்ச்சிஅடைந்தது. இதில், சி.டி.சி., ரகம் அதிகபட்சம், 175 ரூபாய்க்கும், ஆர்தோடக்ஸ் ரகம், 225 ரூபாய்க்கும் விலை போனது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|