பதிவு செய்த நாள்
17 நவ2013
00:09

மும்பை:பொதுத்துறை வங்கிகளில், முதலிடத்தில் உள்ள, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பீ.ஐ.,), நடப்பு நிதியாண்டில், கடன் பத்திரங்களை வெளியிட்டு, 5,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து, எஸ்.பீ.ஐ., தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கூறியதாவது:மத்திய அரசு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில், 2,000 கோடி ரூபாய் பங்கு மூலதனம் மேற்கொள்ள உள்ளது. இத்துடன், தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு, குறிப்பிட்ட அளவிற்கு பங்கு களை ஒதுக்கீடு செய்து, 8,000-9,000 கோடி ரூபாய் திரட்டவும், வங்கி திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம், வங்கியில், மத்திய அரசின் பங்கு மூலதனம், 62 சதவீதத்தில் இருந்து, 58 சதவீதமாக குறையும்.இது தவிர, கடன் பத்திரங்களை வெளியிட்டு, குறிப்பிட்ட அளவிற்கு நிதி திரட்டுவது குறித்தும், வங்கி பரிசீலித்து வருகிறது. ஆனால், இத்தொகை குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இருந்தபோதிலும், இத்தொகை, 5,000 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கலாம். நடப்பு நிதியாண்டிற்குள், அதாவது, வரும் 2014ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், கடன் பத்திரங்கள் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|