பதிவு செய்த நாள்
19 நவ2013
00:38

புதுடில்லி: நடப்பு நவம்பர் மாதத்தில் இதுவரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், 4,000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன, என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ தெரிவித்துள்ளது.இதையடுத்து, நடப்பு 2013ம் ஆண்டில், இதுவரையிலுமாக, இந்திய பங்குச் சந்தைகளில், அன்னிய நிதி நிறுவனங்கள், ஒட்டு மொத்த அளவில், 92,936 கோடி ரூபாயை (1,680 கோடி டாலர்) முதலீடு செய்துள்ளன.
நடப்பு மாதம் 1–12ம் தேதி வரையில், அன்னிய நிதி நிறுவனங்கள், 22,584 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன. அதேசமயம், 18,582 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன.இதையடுத்து, இந்திய பங்குகளில், அன்னிய நிதி நிறுவனங்களின் நிகர முதலீடு, 4,002 கோடி ரூபாயாக (64.50 கோடி டாலர்) உள்ளதுகடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய இரு மாதங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், நிகர அளவில், 28,070 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன.
இருப்பினும், நடப்பு நவம்பர் மாதத்தில், இதுவரையில், அன்னிய நிதி நிறுவனங்கள், 4,070 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்பத்திரங்களை விற்பனை செய்துள்ளன.இதையடுத்து, நடப்பாண்டில் இதுவரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், நிகர அளவில், 54,225 கோடி ரூபாயை கடன்பத்திர சந்தையில் இருந்து விலக்கி கொண்டுள்ளன என, ‘செபி’ மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|