பதிவு செய்த நாள்
19 நவ2013
00:39

மும்பை,: நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் துவக்க தினமான நேற்று, மிகவும் சிறப்பாக இருந்தது. அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு மிகவும் அதிகரித்ததையடுத்து, 'சென்செக்ஸ்', 2.21 சதவீதம் உயர்வுடனும், 'நிப்டி' 2.19 சதவீதம் உயர்வுடனும் முடிவடைந்தன.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.நேற்றைய வியாபாரத்தில், அனைத்து துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கும் தேவை அதிகரித்து காணப்பட்டது.
குறிப்பாக, பொறியியல், வங்கி, நுகர்பொருட்கள் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 451.32புள்ளிகள் அதிகரித்து, 20,850.74 புள்ளி களில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,868.76 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,570.59 புள்ளிகள் வரையிலும் சென்றது.
'சென்செக்ஸ்' கணக்கிடஉதவும், 30 நிறுவனங்களுள், எச்.டீ.எப்.சி. பேங்க், எல் அண்டு டி, ஹிண்டால்கோ உள்ளிட்ட, 26 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், சேசா ஸ்டெர்லைட், கோல் இந்தியா, சிப்லா, பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 132.85 புள்ளிகள் உயர்ந்து, 6,189 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,196.80 புள்ளிகள் வரையிலும் குறைந்தபட்சமாக, 6,110.40 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|