பதிவு செய்த நாள்
19 நவ2013
15:41

பழநி: ஆந்திராவில் இருந்து வரத்து அதிகமாக இருப்பதால், உள்ளூரில் பச்சை மிளகாய் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவமழையை நம்பி, பழநி அருகே உள்ள பாப்பம்பட்டி, அய்யம் பாளையம், லட்சலப்பட்டி, ஆர்.வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் சம்பா மிளகாய் சாகுபடி செய்துள்ளனர். எதிர்பார்த்த அளவு மழையில்லாததால், விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், பச்சை மிளகாய் வரத்து குறைந்து, மார்க்கெட்டில் கிலோ ரூ.50 முதல் 60 வரை விற்பனையானது. தற்போது, ஆந்திரா மிளகாய் வரத்து அதிகரித்துள்ளதால், உள்ளூர் மிளகாய் கிலோ ரூ.16 முதல் 20 வரை விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
விவசாயி ஆர். சீனி வாசன் கூறுகையில், ""மிளகாய் நாற்று ஒன்று 60 பைசாவுக்கு வாங்கி, 5 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்தோம். லாரியில் தண்ணீர் வாங்கி, வயலுக்கு பாய்ச்சி வந்தோம். இதற்கு ஒரு லட்ச ரூபாய் வரை செலவானது. ஒரு ஏக்கருக்கு 2 டன் மிளகாய் விளைச்சல் கிடைக்கும். தண்ணீர் பற்றாக்குறையால், ஒரு டன் தான் கிடைக்கிறது. வெளிமாநில மிளகாய் வரத்தால், உள்ளூர் மிளகாய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|