பதிவு செய்த நாள்
19 நவ2013
15:42

மும்பை : பெண்களுக்கான முதல் வங்கியான பாரதிய மகிலா வங்கியை பிரதமர் மன்மோகன் சிங் மும்பையில் இன்று(நவ., 19ம் தேதி) திறந்து வைத்தார்.
பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக முழுக்க முழுக்க பெண்களே நடத்தும் வங்கிகளை திறக்க கடந்த பட்ஜெட்டில் பெண்களுக்கு என தனி வங்கிகள் திறக்கப்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மும்பையில் பெண்களுக்கான வங்கி இன்று துவங்கியது. பாரத பிரதமர் மன்மோகன் சிங் இதனை திறந்து வைத்தார். நாட்டின் முதல் பெண் பிரதமர் இந்திராவின் பிறந்த தினமான இன்று இந்த வங்கி திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இன்று 7 வங்கி கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்தாண்டு மார்ச் 31-க்கும் மேலும் 25 கிளைகள் திறக்கப்பட இருக்கின்றன.
இந்த மகிலா வங்கி 8 பேர் கொண்ட பெண்களால், அனைத்து மகளிர் கழகங்களின் கீழ் இயக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வங்கியில் ஆண்களும் அக்கவுண்ட் வைத்து கொள்ளலாம். மும்பையில் நடந்த இவ்விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|