பதிவு செய்த நாள்
19 நவ2013
17:23

மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளில் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி, ஏற்றத்துடனேயே முடிந்தன. ரூபாயின் மதிப்பில் காணப்படும் ஏற்றம், அதன்காரமாக இன்போசிஸ், எஸ்.பி.ஐ., மாருதி சுசூகி போன்ற நிறுவன பங்குகளின் விலையில் நல்ல ஏற்றம் போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்தில் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் 69 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் இறுதியில் 40.08 புள்ளிகள் ஏற்றத்துடன் 20,890.82-ஆக முடிந்தது. நிப்டி 14.35 புள்ளிகள் ஏற்றத்துடன் 6,212.40-ஆக முடிந்தது.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 15 நிறுவன பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன. குறிப்பாக இன்போசிஸ், எஸ்பிஐ., மாருதி சுசூகி, ஹிண்டால்கோ, ஜிந்தால் ஸ்டீல் போன்ற நிறுவன பங்குகள் விலை நல்ல ஏற்றத்துடன் காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|