பதிவு செய்த நாள்
20 நவ2013
00:20

புதுடில்லி:சென்ற அக்டோபரில், உள்நாட்டில், 50.08 லட்சம் பேர் விமானப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில் பயணம் செய்தவர் களை (45.55 லட்சம்) விட, 9.94 சதவீதம் அதிகமாகும்.
இந்தியாவில், உள்நாட்டு விமான போக்குவரத்துசந்தையில், இன்டிகோ நிறுவனத்தின் பங்களிப்பு, 30.2 சதவீதமாக உள்ளது. இந்நிறுவனம், சென்ற அக்டோபரில், 15.10 லட்சம் விமானப் பயணிகளை கையாண்டு, தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இதே காலத்தில், ஏர் - இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்கள், 9.19 லட்சம் உள்நாட்டு விமான பயணிகளை கையாண்டுஉள்ளன. ஆந்திராவை சேர்ந்த ஏர் கோஸ்டா நிறுவனம், சென்ற அக்டோபரில், 4,000 உள்நாட்டு விமானப் பயணிகளை ஈர்த்துள்ளது.
இந்நிறுவனம், கடந்த அக்டோபர் 14ம் தேதி, விஜயவாடா - பெங்களூரு இடையே, முதன் முதலாக அதன் உள்நாட்டு விமான சேவையை துவக்கியது.மேற்கண்ட தகவல்களை, விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|