பதிவு செய்த நாள்
20 நவ2013
00:23

புதுடில்லி:நடப்பு 2013–14ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான
முதல் ஆறு மாத காலத்தில், இந்தியநிறுவனங்கள், தனிப்பட்ட கடன் பத்திரஒதுக்கீடு வாயிலாக திரட்டிய தொகை,1,22,091 கோடி ரூபாயாக உள்ளது.
இது, இதற்கு முந்தைய நிதிஆண்டின் இதே காலத்தில், 1,62,352 கோடி ரூபாயாக இருந்தது.ஆக, மதிப்பீட்டு காலத்தில், தனிப்பட்ட கடன்பத்திர ஒதுக்கீடு வாயிலாக,
இந்திய நிறுவனங்கள் திரட்டிய தொகை, 25 சதவீதம் சரிவடைந்துள்ளது என, பிரைம் டேட்டாபேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூலதனம்:பல்வேறு நிறுவனங்கள், அவற்றின் மூலதனத் தேவைக்காக, தனிப்பட்ட முறையில் நிதி நிறுவனங்களுக்கு கடன் பத்திரங்களை வெளியிட்டு, தேவையான நிதியை திரட்டிக் கொள்கின்றன.இந்த வகையில், கணக்கீட்டு காலத்தில், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மிகவும் குறைந்தபட்சமாக, 58,744 கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளன.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில், 31 சதவீதம் சரிவாகும்.
மதிப்பீட்டு காலத்தில், தனியார் துறை நிறுவனங்கள், தனிப்பட்ட கடன் பத்திர ஒதுக்கீடு மூலம் திரட்டி கொண்ட தொகை, 14 சதவீதம் சரிவடைந்து, 51,271 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதே போன்று, மாநில அரசுகளின்நிதி நிறுவனங்கள் திரட்டிய தொகை, 39 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1,251 கோடியாகவும், பொதுத் துறை நிறுவனங்கள் திரட்டிய தொகை, 12
சதவீதம் குறைந்து, 9,692 கோடி ரூபாயாகவும் சரிவடைந்துள்ளன.குறிப்பாக, மாநில அரசு நிறுவனங்கள் திரட்டிய தொகை, 75 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1,133 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், தனிப்பட்ட கடன் பத்திர ஒதுக்கீடு மூலம் அதிகளவு நிதி திரட்டி கொண்டதில் நிதி சேவை நிறுவனங்களின் பங்களிப்பு, 69 சதவீதம் அல்லது 84,879 கோடி ரூபாயாக உள்ளது. இதையடுத்து, மின் துறை நிறுவனங்கள், 10 சதவீத பங்களிப்புடன் (12,025 கோடி ரூபாய்) இரண்டாம் இடத்தில் உள்ளன.பவர் பைனான்ஸ்
குறிப்பாக, பவர் பைனான்ஸ் கார்ப்ரேஷன், மிகவும் அதிகபட்சமாக, 12,158 கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளது.
இதையடுத்து, எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் (9,822 கோடி), எச்.டீ.எப்.சி., (9,610 கோடி), ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்ப்., (8,150 கோடி), மற்றும் பவர் கிரிட் (7,092 கோடி ரூபாய்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.சென்ற 2012–13ம் நிதியாண்டில்,இவ்வகை ஒதுக்கீடுகளின் மூலம், இந்திய நிறுவனங்கள் திரட்டிய தொகை, கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவில், 3.5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது என, பிரைம் டேட்டாபேஸ் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|