பதிவு செய்த நாள்
20 நவ2013
00:26

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், ஆயுள் காப்பீட்டு துறையின் பிரிமிய வருவாய் வசூலில், எல்.ஐ.சி., நிறுவனம் முன்னிலை வகிக்கிறது.
கணக்கீட்டு காலத்தில், எல்.ஐ.சி., நிறுவனத்தின் பிரிமியம் வருவாய், கடந்தாண்டின் இதே காலத்தை விட, 7.26 சதவீதம் அதிகரித்து, 37,906 கோடி ரூபாயாக
வளர்ச்சி கண்டுள்ளது.
அதேசமயம், தனியார் துறையில், 23 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய், கணக்கீட்டு காலத்தில், 4.55 சதவீதம் மட்டும் உயர்ந்து, 12,150 கோடி ரூபாயாக இருந்தது என, காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (இரிடா) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
தனியார் துறையில், மிகப் பெரிய நிறுவனங்களாக உள்ள, ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்ஷியல், எச்.டீ.எப்.சி ஸ்டாண்டர்ட் லைப் மற்றும் எஸ்.பீ.ஐ லைப் ஆகிய நிறுவனங்களின் பிரிமியம் வருவாய், கணக்கீட்டு காலத்தில் குறைந்துள்ளது.அதேசமயம், ரிலையன்ஸ் லைப் நிறுவனத்தின், பிரிமியம் வருவாய், 570 கோடியிலிருந்து, 1,022 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, இரிடாவின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|