பதிவு செய்த நாள்
20 நவ2013
00:30

சேலம்:தமிழக சந்தைகளுக்கு மிளகு வரத்தில் சரிவு ஏற்பட்டதை அடுத்து, ஒரே வாரத்தில், இதன் விலை கிலோவுக்கு, 140 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் மிளகு, மருத்துவ பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
கொடைக்கானல்:தமிழகத்தின் மலைப்பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, கம்பம், தேனி, கன்னியாகுமரிமாவட்டங்களில், அதிக அளவில் மிளகு பயிரிடப்படுகிறது.
தமிழகத்தில் மிளகுபயிரிடப்பட்ட போதிலும், தேவையை பூர்த்தி செய்வதில், கேரளாவே அதிக பங்கு வகிக்கிறது.
கேரளாவில் இருந்து மிளகு வரத்து அதிகரித்தால் மட்டுமே, தமிழகத்தில் மிளகு விலை கட்டுக்குள் இருப்பது வழக்கம்.ஆனால், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு விற்பனைக்கு வரும் மிளகு வரத்தில், கடந்த ஒரு மாதமாக சரிவு ஏற்பட்டு உள்ளது.இதனால், தமிழக சந்தைகளில் மிளகுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மிளகின் விலை, ஒரே வாரத்தில், கிலோவுக்கு, 140 ரூபாய் வரை, உயர்ந்துள்ளது.கடந்த வாரம், 52 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான, ஒரு குவிண்டால் முதல் ரகம் மிளகு,
தற்போது, 66 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே போல், இரண்டாம் ரகம், 48 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது, 62 ஆயிரம் ரூபாயாகவும், மூன்றாம் ரகம், 45 ஆயிரம் ரூபாய்க்கு
விற்றது, 59 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.மொத்த விலையில் உயர்வு ஏற்பட்டதை அடுத்து, சில்லரை விலை கிலோவுக்கு, 140 ரூபாய் முதல், 160 ரூபாய் வரை,
உயர்ந்துள்ளது.
இரண்டாம் ரகம்:முதல் ரகம் மிளகு கிலோ, 680 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் கிலோ, 642 ரூபாய்க்கும், மூன்றாம் ரகம், 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.மிளகுவரத்து எதிர்பார்த்த அளவு இல்லாததால், விலை மேலும் உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|