பதிவு செய்த நாள்
20 நவ2013
00:37

புதுடில்லி:மத்திய அரசு, பல்வேறு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு (எப்.டீ.ஐ.,) அனுமதி அளிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.இவ்வகையில், நடப்பு 2013-14ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்துமாத காலத்தில், இந்திய மருந்து துறையில், 107 கோடி டாலர் (6,420 கோடி ரூபாய்) அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 48.70 கோடி டாலராக ( 2,922 கோடி ரூபாய்) இருந்தது. இரண்டு மடங்கு வளர்ச்சிஆக, மருந்து துறையில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, இரண்டு மடங்கிற்கும் மேல் வளர்ச்சி கண்டுஉள்ளது என, மத்திய தொழிற் கொள்கை மற்றும் மேம்பாட்டுதுறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பல பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய மருந்து துறையில், கால் பதிக்கும் வகையில், இத் துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை கையகப்படுத்தி வருகின்றன.இந்திய மருந்துதுறை சிறப்பான அளவில் வளர்ச்சிகண்டு வருவதையடுத்து, வெளிநாட்டு
நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களில் அதிகளவில் முதலீடுசெய்வதுடன், கையகப்
படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றன.
மத்திய அரசு, மருந்து துறையில், அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளும் நிறுவனங்
களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது.குறிப்பாக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை அதிகளவில் மேற்கொள்ளும் வகையில், வர்த்தக அமைச்சகம், நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.கடந்த, 2012ம் ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு ஏப்ரல் வரையிலான காலத்தில், மருந்து துறையில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீட்டில், 96 சதவீதம், ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களில்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அபாயம்:மருந்து துறையில், அன்னியநேரடி முதலீடு அதிகரித்து வருவதால், உள் நாட்டில் பொதுப்பண்பு அடிப்படையில் உற்பத்திசெய்யப்படும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக இத்துறையைச் சேர்ந்தஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதை கருத்தில் கொண்டு, பொதுப் பண்பு அடிப்படையிலான மருந்து உற்பத்தி
நிறுவனங்கள், பாதிப்படையாத வகையில் அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையில் மாற்றம் செய்யு மாறு மருந்து அமைச்சகம், அமைச்சரவை குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளது.
அமெரிக்க நிறுவனம்:மத்திய அரசு, அண்மையில், பொதுப் பண்பு அடிப்படையில் மருந்து உற்பத்தியில் ஈடுபட்டு வரும், அஜிலா ஸ்பெஷாலிட்டிஸ்நிறுவனத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த மைலன் நிறுவனம் 5,168 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு அனுமதி வழங்கியது.இது தவிர, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சனோபி அவந்திஸ், இந்தியாவின் சனந்தா பயோடெக்னிக்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தவும் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, டைச்சி சாங்க்யோ நிறுவனம், இந்தியாவின் ரான் பாக்ஸி நிறுவனத்தை, 460 கோடி டாலருக்கு வாங்கியது. இது, அப்போது, மிகப் பெரிய முதலீடாக கருதப்பட்டது.மத்திய அரசு, மருந்து துறையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கிஉள்ளது. என்றாலும், புதிய திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன் அனுமதி பெறாமல் முதலீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம், ஏற்கனவே உள்ள ஒரு இந்திய மருந்து நிறுவனத்தில், அன்னிய நிறுவனம் முதலீடு செய்ய வேண்டுமானால், இந்தியாவின் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெற வேண்டும்.
சேவை துறை:கணக்கீட்டு காலத்தில், மருந்து துறையை அடுத்து, இந்திய சேவை துறையில், 119 கோடி டாலர் அன்னிய நேரடி முதலீடு பெறப்பட்டுள்ளது.இதையடுத்து, மோட்டார் வாகனம் (66.10 கோடி டாலர்), கட்டுமானம் (59.20 கோடி டாலர்) மற்றும் ரசாயனம் (35.90 கோடி டாலர்) ஆகிய துறைகள், அதிகளவில் அன்னிய நேரடி
முதலீட்டை கவர்ந்துள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|