பதிவு செய்த நாள்
20 நவ2013
10:17

மும்பை : கடந்த இருதினங்களாக ஏற்றத்தில் இருந்த இந்திய பங்குசந்தைகள் வாரத்தின் மூன்றாம் நாளான இன்று(நவ., 20ம் தேதி) சரிவுடன் துவங்கியுள்ளன. வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 28.04 புள்ளிகள் சரிந்து ரூ.20,862.78-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 9.85 புள்ளிகள் சரிந்து 6,193.50-ஆகவும் இருந்தது.
ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்ற-இறக்கம் மற்றும் கடந்த இருதினங்களாக முன்னணி நிறுவன பங்குகளின் விலை நல்ல ஏற்றம் கண்டதால் முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்க தொடங்கியது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகளில் சரிவு காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.49 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 0.10 சதவீதமும் சரிந்து காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|