பதிவு செய்த நாள்
22 நவ2013
01:16

புதுடில்லி: சென்ற அக்டோபர் மாதத்தில், இந்திய நிறுவனப் பங்குகளில், பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான அன்னிய முதலீடு, 1.84 லட்சம் கோடி ரூபாயை (2,900 கோடி டாலர்) எட்டியுள்ளது. பங்குச்சந்தை:இது, கடந்த இரண்டரை ஆண்டுகளில் காணப்படாத அதிகபட்ச அளவாகும் என, பங்குச் சந்தை கட்டுப் பாட்டு அமைப்பான 'செபி' வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.சென்ற செப்டம்பர் மாதத்தில், இந்திய பங்குச் சந்தைகளில், பங்கேற்பு ஆவணங்கள் மூலம் மேற்கொள்ளப்பட் முதலீடு, 1.71 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.கடந்த 2011ம் ஆண்டு மே மாதத்தில் தான், பங்கேற்பு ஆவணங்கள் மூலம், இந்திய பங்குச் சந்தைகளில், அதிகபட்ச அளவாக, 2,11,199 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள அதிக சொத்து கொண்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், பதிவு செய்யப்பட்ட அன்னிய நிதி நிறுவனங்கள் வெளியிடும், பங்கேற்பு ஆவணங்கள் மூலம் முதலீடு மேற்கொள்கின்றனர். இதனால், நேரம் மற்றும் செலவு ஆகியவை மிச்சமாகின்றன.சென்ற அக்டோபர் மாதத்தில், பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாக, கடன்பத்திரங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு, 1.11 லட்ம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. அன்னிய நிறுவனங்கள்: இருப்பினும், இதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது, அக்டோபர் மாதத்தில், பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடு, 13.06 சதவீதத்திலிருந்து, 12.98 சதவீதமாக குறைந்துள்ளது.கடந்த அக்டோபரில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய நிறுவனப் பங்கு களில் மேற்கொண்ட முதலீடு, 15,700 கோடி ரூபாயாக உள்ளது. அதேசமயம், 13,500 கோடி ரூபாயை கடன்பத்திர சந்தையிலிருந்து விலக்கி கொண்டுள்ளன என, 'செபி' மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|