பதிவு செய்த நாள்
22 நவ2013
01:17

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்றும் மிகவும் மோசமாக இருந்தது. அமெரிக்க மத்திய வங்கி, வரும் மாதங்களில், பொருளாதார ஊக்குவிப்பு சலுகை திட்டங்களை குறைக்க உள்ளது என்ற தகவலால், 'சென்செக்ஸ்', 1.97 சதவீதம் சரிவுடனும், 'நிப்டி', 2.02 சதவீதம் சரிவுடனும் முடிவடைந்தன. அமெரிக்க வேலை வாய்ப்பு சந்தையில், முன்னேற்றம் காணப்படும் நிலையில், கடன்பத்திரங்களை வாங்கும் அளவு குறைக்கப்படும் என்ற நிலைப்பாட்டால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. நேற்றைய வியாபாரத்தில், அனைத்து துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின. குறிப்பாக, வங்கி (2.49 சதவீதம்), பொறியியல் சாதனங்கள் (2.37 சதவீதம்), ரியல் எஸ்டேட் (2.29 சதவீதம்) ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, குறிப்பிடத்தக்க அளவிற்கு சரிவை கண்டன.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 406.08 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 20,229.05 புள்ளிகளில் நிலைகொண்டது.வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,579.26 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,189.23 புள்ளிகள் வரையிலும் சென்றது.'
சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனப் பங்குகளின் விலையும் வீழ்ச்சி கண்டன. குறிப்பாக, சேசா ஸ்டெர்லைட் மற்றும் எச்.டீ.எப்.சி., ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை, 3.5 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவுஅடைந்து காணப்பட்டன. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 123.85 புள்ளிகள் சரிவடைந்து, 5,999.05 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,097.35 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,985.40 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|