பதிவு செய்த நாள்
22 நவ2013
02:06

புதுடில்லி,: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், நாட்டின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, 66,387 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 17 சதவீதம் அதிகம் என, வேளாண் செலவினங்கள் மற்றும் விலைகள் ஆணையம் தெரிவித்துள்ளன.
பாசுமதி அரிசி: கடந்த ஒரு சில ஆண்டுகளாக, நாட்டின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு பாசுமதி, சாதாரண அரிசி, இறைச்சி, கோதுமை, பழங்கள், காய்கறிகள் மற்றும் பதப்படுத்தப் பட்ட உணவு வகைகள் ஏற்றுமதி அதிகரித்து வருவதுதான் காரணம்.
கடந்த 2012–13ம் நிதியாண்டில், நாட்டின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, 1.20 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2011–12ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (86,028 கோடி ரூபாய்) விட, 40 சதவீதம் அதிகமாகும்.
கடந்த 2010–11ம் நிதியாண்டில், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, 43,731 கோடி ரூபாயாக இருந்தது. அவ்வாண்டில், இதன் ஏற்றுமதி, 15.5 சதவீதம் வளர்ச்சி கண்டுஇருந்தது.சென்ற நிதியாண்டில், நாட்டின் மொத்த ஏற்றுமதியில், வேளாண் பொருட்களின் பங்களிப்பு, 10.66 சதவீதமாக இருந்தது. இது, நடப்பு நிதிஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் மட்டும், 10.35 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.கடந்த நிதியாண்டில், கொத்தவரை விதை ஏற்றுமதி, மிகவும் சிறப்பாக இருந்தது.
அமெரிக்கா உள்ளிட்ட பல வளர்ச்சியடைந்த நாடுகளில், பாறை எரிவாயு துரப்பணப் பணிகளில், கொத்தவரை விதையிலிருந்து எடுக்கப்படும் பசை, அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால், கடந்த நிதிஆண்டில், இதன் ஏற்றுமதி மிகவும் அதிகரித்து காணப்பட்டது.நடப்பு வேளாண் பருவத்தில், உள்நாட்டில் பல மாநிலங்களில் பருவ மழை பொழிவு நன்கு உள்ளதுடன், தட்பவெப்ப நிலையும் சாதகமாக உள்ளது.
கோதுமை:இதனால், உணவு தானியங்கள் உற்பத்தி, குறிப்பாக, நெல், கோதுமை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகிய வற்றின் உற்பத்தி சிறப்பாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு, அரிசி, கோதுமை ஆகியவற்றின் ஏற்றுமதி மீதான தடையை முற்றிலும் விலக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும், 'அபெடா' அமைப்பு, நடப்பு நிதியாண்டில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டை விட, சற்றே அதிகரிக்கும் என, மதிப்பிட்டுள்ளது. இதற்கு, கொத்தவரை விதை ஏற்றுமதி குறைந்துள்ளது தான் முக்கிய காரணம்.
இறைச்சி:தற்போதைய நிலவரப்படி, இதன் ஏற்றுமதி, 52 சதவீதம் சரிவடைந்து, 7,218 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், பாசுமதி அரிசி ஏற்றுமதி வாயிலான வருவாய், 14,118 கோடி ரூபாயாகவும், சாதாரண வகை அரிசி ஏற்றுமதி வாயிலான வருவாய், 8,810 கோடி ரூபாயாகவும் உள்ளது.
இவை தவிர, இறைச்சி (11,887 கோடி). கோதுமை (5,681 கோடி), பழங்கள் (1,784 கோடி ரூபாய்) மற்றும் காய்கறிகள் (1,970 கோடி ரூபாய்) போன்றவற்றின் ஏற்றுமதி வருவாயும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது.நடப்பாண்டில், அரிசி ஏற்றுமதி, கடந்த 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கோடி டன் என்ற அளவிற்கே இருக்கும் என, திர்பார்க்கப்படுகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, நாட்டின் அரிசி ஏற்றுமதி
அதிகரித்ததையடுத்து, சர்வதேச சந்தையில், அரிசி ஏற்றுமதியில் முன்னிலையில் இருந்த, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளை, இந்தியா பின்னுக்கு தள்ளியுள்ளது.இச்சூழ்நிலையில், இந்திய வேளாண் பொருட்கள், சர்வதேச தர நிர்ணயித்திற்கு ஏற்ப உள்ளதால், இந்திய வேளாண் பொருட்களுக்கு, உலகின் பல்வேறு நாடுகளில் தேவைப்பாடு அதிகரித்துள்ளது.
பால் பொருட்கள்: மேலும், மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்களாலும், இதன் ஏற்றுமதி உயர்ந்து வருகிறது என, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.மேற்கண்ட வேளாண் பொருட்கள் தவிர, நடப்பு நிதிஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில், பால் பொருட்கள் ஏற்றுமதி, 1,634 கோடி ரூபாயாகவும், பருப்பு வகைகள் ஏற்றுமதி, 1,018 கோடி ரூபாயாகவும் வளர்ச்சி கண்டுள்ளதாக, வேளாண் செலவினங்கள் மற்றும் விலைகள் ஆணையத்தின் தலைவர் அசோக் குலாத்தி தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|