பதிவு செய்த நாள்
22 நவ2013
16:59

மும்பை : இருதினங்கள் சரிவுக்கு பின்னர் வாரத்தின் இறுதிநாளில் ஏற்றத்துடன் துவங்கிய சென்செக்ஸ் இறுதியில் சரிவில் முடிந்தது. அமெரிக்க பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் மற்றும் ஆசிய பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியது. ஆனால் முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்க தொடங்கியதால் இறுதியில் இந்திய பங்குசந்தைகள் சரிவில் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 11.66 புள்ளிகள் சரிந்து 20,217.39-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 3.60 புள்ளிகள் சரிந்து 5,995.45-ஆகவும் சரிந்தது.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில் 18 பங்குகள் விலை சரிவில் முடிந்தன. குறிப்பாக டாடா மோட்டார்ஸ், ஐடிசி., ஐசிஐசிஐ., பஜாஜ் ஆட்டோ போன்ற பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. அதேசமயம் எச்டிஎப்சி, எல்அண்ட்டி, ஓஎன்ஜிசி உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|