பதிவு செய்த நாள்
25 நவ2013
05:04

புதுடில்லி:நாட்டின் வெங்காயம் ஏற்றுமதி, நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில், 22 ஆயிரம் டன்னாக சரிவடைந்துள்ளது. இது, கடந்தாண்டில் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில், 86 சதவீதம் வீழ்ச்சியாகும்.இருப்பினும், செப்டம்பர் மாதத்தை காட்டிலும், அக்டோபரில், 3 ஆயிரம் டன் அதிகமாக வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என, தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி அமைப்பு ெவளியிட்டு உள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, உள்நாட்டில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், இதன் ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியது. இனால், மதிப்பீட்டு மாதத்தில், வெங்காயத்தின் ஏற்றுமதி குறைந்துள்ளது.நடப்பாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத காலத்தில், நாட்டின் வெங்காயம் ஏற்றுமதி, 7,38,246 டன்னாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 11,56,424 டன்னாக அதிகரித்து காணப்பட்டது. தற்போது, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங் களிலிருந்து, புதிய வெங்காய வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. தற்போதைய நிலையில், சில்லரை விற்பனையில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, 50–60 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|