பதிவு செய்த நாள்
25 நவ2013
05:05

புதுடில்லி:நடப்பு 2013 – 14ம் நிதியாண்டின், செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், மத்திய அரசின் ஒட்டு மொத்த பொதுக்கடன் (பொது கணக்கில் உள்ள கடன் நீங்கலாக), 45,80,472 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது,இது, இதற்கு முந்தைய முதல் காலாண்டில், 42,92,870 கோடி ரூபாயாக இருந்தது.ஆக, இரண்டாவது காலாண்டில், மத்திய அரசின் ஒட்டு மொத்த பொதுக்கடன், 6.7 சதவீதம் அதிகரித்து உள்ளது. இது, முதல் காலாண்டில், 4.4 சதவீதம் என்ற அளவில் இருந்தது என, மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், ஒட்டு மொத்த பொதுக்கடனில், உள்நாட்டு கடனின் பங்களிப்பு, 90.8 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, முதல் காலாண்டில், 90.6 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
பட்ஜெட் மதிப்பீட்டில், நடப்பு, 2013 – 14ம் நிதிஆண்டில், நாட்டின் நிதிப் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.8 சதவீதம் அல்லது 5,42,499 கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 5,20,925 கோடி ரூபாயாக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 5.2 சதவீதம்) இருந்தது.நடப்பு நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் மத்திய அரசு, வெளிச் சந்தையிலிருந்து, மொத்த மற்றும் நிகர அளவில் முறையே, 5,79,009 கோடி மற்றும் 4,84,000 கோடி ரூபாய் கடன் திரட்ட வேண்டியுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|