பதிவு செய்த நாள்
25 நவ2013
05:06

சண்டிகர்:நடப்பு நிதியாண்டில், ஐ.டி., என்று சுருக்கமாக அழைக்கப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையின் ஏற்றுமதி, 8,600 கோடி டாலராக உயரும் என, ‘நாஸ்காம்’ அமைப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து, இந்த அமைப்பின் தலைவர் சோம் மிட்டல், கூறியதாவது:
ஏராளமான நிறுவனங்கள், புதிய நாடுகளில் அவற்றின் வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளன. அவற்றின் வர்த்தகத்தில், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.இதன் காரணமாக, நடப்பு நிதியாண்டில், தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி, டாலர் அடிப்படையில், 12–14 சதவீதமாக உயரும். அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்ந்ததால், இதை விட, அதிக வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது.
கடந்த நிதியாண்டில், தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சி மந்தமாக இருந்தது. அதனால், நாட்டின் ஐ.டி., துறை, 10.3 சதவீதம் என்ற அளவிற்கே வளர்ச்சி கண்டது.நடப்பு நிதியாண்டில், கடந்த இரண்டு காலாண்டு களில், தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த பல நிறுவனங்களின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. அதனால், இத்துறையின் ஏற்றுமதி, 7,600 டாலரில் இருந்து, 8,600 டாலராக உயரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|