பதிவு செய்த நாள்
25 நவ2013
05:08

இந்தியா, அதன் ஒருசில இறக்குமதி பொருட்களுக்கு, டாலருக்கு பதிலாக, இந்திய ரூபாயில் பணப் பரிமாற்றம் மேற்கொள்வது குறித்து, தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
பேச்சுவார்த்தை:இது தொடர்பாக, ஜப்பான், ஈராக், வெனிசுலா நாடுகளுடன் பரஸ்பர பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால் ஏற்படும் பாதிப்பில் இருந்து, தற்காத்துக் கொள்ளும் பொருட்டு, மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.அதுமட்டுமின்றி, ரூபாய் மதிப்பின் ஏற்ற, இறக்கத்தை கட்டுப்படுத்தி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், ரூபாயை, சர்வதேச நாடுகள் ஏற்றுக் கொள்ளச் செய்யவும், மேற்கண்ட நடவடிக்கை உதவும்.
வெளிநாடுகளுடனான வர்த்தகத்தில், ரூபாய் வாயிலான பணப்பரிவர்த்தனை குறித்து ஆராய, குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இக்குழு, இந்தியாவுடன் உபரி வர்த்தகம் புரியும், 10 நாடுகளை, குறிப்பாக, எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளை அதிகம் கண்டறிந்துள்ளது.அடுத்த சில நாட்களில், எந்தெந்த நாடுகளுடன், பேச்சுவார்த்தை நடத்தி, ரூபாய் வாயிலான பரிவர்த்தனை மேற் கொள்வது என்பது குறித்து, இக்குழு முடிவு செய்யும்,
மத்திய நிதி அமைச்சகம், இது தொடர்பாக, ஏற்கனவே, வெனிசுலாவுடன் பேச்சுவார்த்தை நடத்த, கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளது.இத்துடன், ஒரு சில நாடுகளின் கரன்சிகளை, ஏற்றுக் கொள்வது குறித்தும் இந்தியா பரிசீலித்து வருகிறது.இதுகுறித்து, வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியா, அதிக அளவில் வர்த்தகப் பற்றாக்குறை வைத்துள்ள நாடுகளுடன், கரன்சி பரிமாற்ற ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பாக, வர்த்தகம் மற்றும் நிதி அமைச்சகங்கள், ரிசர்வ் வங்கி ஆகியவற்றுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.
யுவான் – ரூபாய் பரிமாற்றத்தை துவங்க, சீனா ஆர்வமாக உள்ளது. அது போன்று ஜப்பானும், இந்திய ரூபாயை ஏற்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஈரான்:இந்தியா, ஏற்கனவே, ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு, ரூபாயை அளித்து வருகிறது. அடுத்து, ஈராக் மற்றும் வெனிசுலா நாடுகளின் எண்ணெய் இறக்குமதிக்கும், டாலருக்கு பதிலாக, ரூபாயை வழங்குவது குறித்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.இது நடைமுறைக்கு வரும்பட்சத்தில், இந்தியாவில் டாலருக்கான தேவை பெருமளவு குறையும் என்பதுடன், ரூபாய் மதிப்பும் உயரும். இத்துடன, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் வெகுவாகக் குறையும்.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|