தங்கம் விலை ரூ.72 குறைந்ததுதங்கம் விலை ரூ.72 குறைந்தது ... 2,875 நிறுவனங்களின் நிகரலாபம் 27 சதவீதம் குறைந்துபோனது 2,875 நிறுவனங்களின் நிகரலாபம் 27 சதவீதம் குறைந்துபோனது ...
சூடுபிடிக்கும் சரும பராமரிப்பு பொருட்கள் விற்பனை:குளிர்காலம் துவங்கியதால்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2013
01:06

புதுடில்லி:குளிர்காலம் துவங்கியுள்ளதால், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், 'லோஷன்','கிரீம்' உள்ளிட்ட பல்வேறு சருமப் பராமரிப்பு பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.வெளிநாடுகளில் கடுமையான குளிர் காலம் துவங்குவதற்கு முன்பாகவே, மக்கள், சருமப் பராமரிப்பு பொருட்களை வாங்கி இருப்பில் வைத்துக் கொள்வது வழக்கம்.

வெடிப்புகள்:கடும் பனிப் பொழிவின்போது, உதடு, பாதம் போன்ற உடலுறுப்பு பகுதிகளில் ஏற்படும் வெடிப்புகளை தடுக்க, 'வேசோலைன்' உள்ளிட்ட பல்வேறு 'லோஷன்' களையும், 'கிரீம்'களையும் வெளிநாட்டினர் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இத்துடன், உடலை கதகதப்பாக வைத்துக் கொள்ள உதவும், சரும பூச்சுகளையும், உபயோகிக்கின்றனர்.அதனால், மேற்கண்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களின் விற்பனை, உள்நாட்டை விட, வெளிநாடுகளில் அதிகரித்து வருகிறது.எடுத்துக் காட்டாக, சென்ற செப்டம்பருடன் முடிந்த, இரண்டாவது காலாண்டில், 14 முன்னணி நுகர்பொருள் நிறுவனங்களின் வர்த்தகம், 12.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, சென்ற, 2012-13ம் நிதியாண்டின், இதே காலத்தில், 12 சதவீதமாக இருந்தது.

ஆய்வு:எனினும், சர்வதேச சந்தை யில் வலுவாக காலுான்றியுள்ள நுகர்பொருள் நிறுவனங்களின் விற்பனை, குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளதாக ஆய்வொனறில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, தாபர், இமாமி, கோத்ரெஜ் கன்ஸ்யூமர், மாரிக்கோ உள்ளிட்ட நிறுவனங்களின், வெளிநாட்டு விற்பனை, சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது.

மதிப்பீட்டு காலத்தில், கோத்ரெஜ் கன்ஸ்யூமர்ஸ் நிறுவனத்தின், வெளிநாட்டு வருவாய், 33 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, முதல் காலாண்டில், 30 சதவீதமாக இருந்தது. அதே சமயம், இந்நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை, 14 சதவீத அளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளது.இந்நிறுவனத்தின் 'கேலைன்' அழகு சாதனங்கள் விற்பனை, ஐரோப்பாவில், இரு மடங்கு அதிகரித்துள்ளது. இத்துடன், புதிய பிராண்டை கையகப்படுத்தியதன் மூலம், இதன் சந்தை பங்களிப்பும் உயர்ந்துள்ளது.ஆப்ரிக்காவில், இந்நிறுவனத்தின் கேச பாதுகாப்பு பொருட்களின் விற்பனை, 53 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தாபர் இந்தியா நிறுவனம், ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் அழகு சாதனப் பொருட்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம், அதன் பல்வேறு பொருட்களை, அமெரிக்கா, துருக்கி மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.சர்வதேச விற்பனை:மதிப்பீட்டு காலத்தில், இந் நிறுவனத்தின் சர்வதேச விற்பனை, 26 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

'பாராசூட்' தேங்காய் எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வரும் மாரிக்கோ நிறுவனத்தின், வெளிநாட்டு விற்பனை, கடந்த மூன்று காலாண்டுகளாக, 14 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.இந்துஸ்தான் யூனிலீவர், இமாமி, கோல்கேட் பாமோலிவ், புராக்டர் அண்டு காம்பிள் போன்ற நிறுவனங்களின், உள்நாடு மற்றும் வெளிநாட்டு விற்பனையும் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது.

சாயப்பொருட்கள்:உள்நாட்டில், இந்துஸ்தான்லீவர் நிறுவனத்தின், 'வேஸ்லின்', 'டவ்' போன்ற சருமப் பராமரிப்பு 'லோஷன்'கள் விற்பனை, இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளன.இரண்டாவது காலாண்டில், இமாமி நிறுவனத்தின், 'போரோபிளஸ்' உள்ளிட்ட, சரும பராமரிப்பு பொருட்களின் விற்பனை, 28 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

இதே காலத்தில், கோத்ரெஜ் நிறுவனத்தின் கேச சாய பொருட்களின் விற்பனை, 24 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.கோல்கேட் பாமோலிவ், தாபர் இந்தியா, இந்துஸ்தான் லீவர் நிறுவனங்களின் பற்பசை விற்பனை, இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது.மேற்கண்ட நிறுவனங்கள், விற்பனையை அதிகரிக்க, விளம்பரங்களுக்காக அதிகம் செலவிடுகின்றன. இருந்த போதிலும், அவற்றின் சராசரி நிகர லாபம், 14 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)