பதிவு செய்த நாள்
27 நவ2013
00:07
மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, சற்று சரிவடைந்துள்ளது. நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு, 62.50 ஆக இருந்தது. இந்த மதிப்பு, நேற்று, 2 காசுகள் குறைந்து, 62.52 ஆக இறக்கம் கண்டது.இந்திய பங்குச் சந்தைகளில் மந்த நிலை, எண்ணெய் நிறுவனங்கள், வங்கிகள், இறக்குமதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான டாலர் தேவை அதிகரிப்பு போன்றவற்றால், அதன் மதிப்பு உயர்ந்து, ரூபாய் மதிப்பு குறைய வழி வகுத்தது.நேற்று, அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 62.45ஆக உயர்ந்து காணப்பட்டது. இது, ஒரு கட்டத்தில், 62.55 வரை சென்றது.நடப்பாண்டு ஜனவரி முதல், அமெரிக்க டாலருக்கு எதிராக, அதிகம் மதிப்பு குறைந்த ஆசிய கரன்சிகளில், இந்தியாவின் ரூபாய், மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு இடங்களில், இந்தோனேஷியாவின் ருப்யா மற்றும் ஜப்பானின் யென் ஆகியவை உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|