ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதியில் வளர்ச்சிஆப­ர­ணங்கள் ஏற்­று­மதியில் வளர்ச்சி ... ‘எரி­வாயு விலை உயர்வை திரும்ப பெறும் திட்­ட­மில்லை’ ‘எரி­வாயு விலை உயர்வை திரும்ப பெறும் திட்­ட­மில்லை’ ...
பி.சி.சி., அமைப்புக்கு எதி­ராக பல்­லடத்தில் புதிய கறிக்­கோழி பண்­ணை­யாளர் குழு உதயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2013
00:11

நாமக்கல்,: ல்­லடம் கறிக்­கோழி ஒருங்­கி­ணைப்பு குழு நிர்­ண­யிக்கும் கறிக்­கோழி விலைக்கு, எதிர்ப்பு கிளம்பி உள்­ளதால், சில பண்­ணை­யா­ளர்கள் தனிக்­கு­ழு­வாக செயல்­பட்டு, தனி­யாக விலை நிர்­ணயம் செய்து, கறிக்­கோழியை சப்ளை செய்து வரு­கின்­றனர்.ஆந்திராதிருப்பூர் மாவட்டம், பல்­லடம் கறிக்­கோழி ஒருங்­கி­ணைப்பு குழு (பி.சி.சி.,) சார்பில், நிர்­ண­யிக்­கப்­படும் விலைக்கு, உயிர் கறிக்­கோ­ழியை, வியா­பா­ரிகள், பண்­ணை­களில் பெற்று, கேரளா, ஆந்­திரா, தமி­ழக வட மாவட்­டங்­க­ளுக்கு சப்ளை செய்­கின்­றனர்.
கேரள அரசு, ஒரு கிலோ உயிர் கோழியின் விலைக்கு, ‘பிளாட் ரேட்’ நிர்­ணயம் செய்து, கூடுதல் வரி வசூ­லித்து வரு­கி­றது. மேலும், அந்த மாநி­லத்­திற்கு வாரந்­தோறும், தமி­ழ­கத்தில் இருந்து, 20 லட்சம் கிலோ கறிக்­கோழி சப்ளை செய்த நிலையில், தற்­போது, 10 லட்­ச­மாக குறைக்­கப்­பட்­டது.கேரள அரசின், ‘பிளாட் ரேட்’ முறை, அதி­க­ளவு கறிக்­கோ­ழிகள் உற்­பத்தி, சில்­லரை வியா­பா­ரிகள் ஆதிக்கம் ஆகி­ய­வற்றால், கறிக்­கோழி விற்­பனை கடு­மை­யாக சரிந்து, தற்­போது, கணி­ச­மாக விலை உயர்ந்து வரு­கி­றது.
கொள்முதல் விலை:மேலும், பல்­ல­டத்தில் நிர்­ண­யிக்­கப்­படும் கொள்­முதல் விலையை விட, பண்­ணை­களில் குறைந்த விலைக்கு கறிக்­கோழி கிடைக்­கி­றது.இந்­நி­லையில், பல்­லடம் கறிக்­கோழி ஒருங்­கி­ணைப்பு குழு சார்பில், நிர்­ண­யிக்­கப்­படும் விலையும், வியா­பா­ரிகள், பண்­ணையில் இருந்து வாங்கிச் செல்லும் விலையும் முரண்­பா­டாக இருப்­பதால், பி.சி.சி., - மற்றும் பண்­ணை­யா­ளர்­க­ளுக்கு இடையே கருத்து வேறு­பாடு இருந்து வரு­கி­றது.அதனால், பி.சி.சி.,யில் இணைந்­தி­ருக்கும் சில பண்­ணை­யா­ளர்கள், ஒரு வார­மாக, கறிக்­கோ­ழிக்கு, தனி விலை நிர்­ணயம் செய்து, விற்­பனை செய்து வரு­கின்­றனர். பண்ணை விலைக்கே, கேரளா உள்­ளிட்ட பகு­தி­க­ளுக்கு கறிக்­கோ­ழியை சப்ளை செய்யத் துவங்கி உள்­ளனர்.கறிக்­கோ­ழியின் விலை, நவம்பர், 4ம் தேதி, கிலோ, 40 ரூபா­யாக இருந்­தது. இது, படிப்­ப­டி­யாக உயர்ந்து, நேற்­றைய நில­வ­ரப்­படி, 59 ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.பயன் இல்லைநாமக்கல் கறிக்­கோழி பண்­ணை­யாளர் சுப்­ர­ம­ணியம் கூறி­ய­தா­வது:பி.சி.சி., நிர்­ண­யிக்கும் கறிக்­கோழி கொள்­முதல் விலை மற்றும் நாமக்கல், ‘நிக்’ நிர்­ண­யிக்கும் முட்டை கொள்­முதல் விலை ஆகி­யவை, பண்­ணை­யா­ள­ருக்கு எவ்­வி­தத்­திலும் நேர­டி­யாக பயன் தரு­வ­தில்லை.
வியா­பா­ரிகள் மற்றும் விற்­ப­னை­யாளர் நிர்­ண­யிக்கும் விலையே இறு­தி­யா­ன­தாக உள்­ளது.பெய­ருக்­காக செயல்­படும் ஒருங்­கி­ணைப்புக் குழுவில் இருந்து, பல்­லடம் கறிக்­கோழி ஒருங்­கி­ணைப்பு குழு நிர்­வா­கிகள் சிலர் வெளி­யேறி, தனி­யாக கறிக்­கோ­ழிக்கு விலை நிர்­ணயம் செய்து, பண்ணை விலைக்கே, கறிக்­கோ­ழியை விற்­பனை செய்து வரு­கின்­றனர்.இவ்­வாறு, அவர் கூறினார்.
விலை நிர்ணயம்:பல்­லடம் பி.சி.சி., செயலர் கண்ணன் கூறி­ய­தா­வது:பல்­லடம் கறிக்­கோழி ஒருங்­கி­ணைப்பு குழுவில் இருந்து, எந்த பண்­ணை­யா­ளரும் வெளி­யே­ற­வில்லை. சில பண்­ணை­யா­ளர்கள் தனிக் குழு­வாக செயல்­பட்டு, பண்ணை விலைக்கே கறிக் ­கோ­ழியை சப்ளை செய்­கின்­றனர்.சில கம்­பெனி பிராய்லர் கோழிகள், 10 முதல், 12 ரூபாய் வரை, பண்ணை மற்றும் கொள்­முதல் விலை வித்­தி­யா­சத்தில் விற்­கப்­ப­டு­கி­றது. ஆனால், பி.சி.சி., நிர்­ண­யிக்கும் கொள்­முதல் விலை, குறைந்­த­பட்சம், இரண்டு ரூபாய் அள­விற்கு வித்­தி­யாசம் இருக்கும்.இவ்­வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)