சர்க்­கரை ஆலை­க­ளுக்கு வட்டி இல்­லாமல் கடன் வழங்க திட்டம்சர்க்­கரை ஆலை­க­ளுக்கு வட்டி இல்­லாமல் கடன் வழங்க திட்டம் ... ரூபாயின் மதிப்பில் ஏற்றம் - ரூ.62.14 ரூபாயின் மதிப்பில் ஏற்றம் - ரூ.62.14 ...
ஏழு­ம­லையான் வரு­மா­னத்தை உயர்த்த புதிய உத்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2013
00:13

திருப்­பதி: திரு­மலை ஏழு­ம­லை­யானின் வரு­மா­னத்தை உயர்த்த, திரு­மலை – திருப்­பதி தேவஸ்­தானம் புதிய திட்­டத்தை, செயல்­ப­டுத்த உள்­ளது.திரு­ம­லைக்கு வரும் பக்­தர்கள், ஏழு­ம­லை­யா­னுக்கு சமர்ப்­பிக்கும் காணிக்கை மற்றும் இதர வரு­மா­னங்­களை, வங்­கி­களில், தேவஸ்­தானம் டெபாசிட் செய்­கி­றது.தின­சரி மாறி வரும், வட்டி விகி­தத்தை கருத்தில் கொண்டு, மூன்று மாதத்­திற்கு ஒரு முறை, வைப்பு நிதி திரும்பப் பெறப்­பட்டு, மீண்டும், டெபாசிட் செய்­யப் ­ப­டு­கி­றது.700 கோடி முத­லீடுஇந்­நி­லையில், கடந்த மாதம், வைப்பு நிதி முதிர்­வ­டைந்­தது.
இத­னுடன், ஏழு­ம­லையான் உண்­டியல் மூலம் கிடைத்த வரு­மா­னத்­தையும் இணைத்து, 700 கோடி ரூபாயை வங்­கியில் டெபாசிட் செய்ய, தேவஸ்­தானம் முடிவு செய்­தது.இதை அறிந்த, ஆந்­திரா வங்கி, சிண்­டிகேட் வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் ஐத­ராபாத் ஆகி­ய­வற்­றுக்கு இடையே, டெபா­சிட்டை பெறு­வதில் கடும் போட்டி உரு­வா­னது.தற்­போது வரை, வங்­கிகள், டெபா­சிட்­டுக்கு குறைந்த பட்­ச­மாக, 9.5 சத­வீதம் முதல், அதி­க­பட்­ச­மாக, 9.7 சத­வீதம் வரை, வட்டி அளிக்­கின்­றன. ஆனால், தன் முத­லீட்­டிற்கு தக்­க­வாறு, வட்டி விகி­தத்தை, உயர்த்த நினைத்த தேவஸ்­தானம், புதிய வழியை பின்­பற்­று­கி­றது.மற்ற வியா­பா­ரத்தை போல், ஒப்­பந்­த­புள்ளி மூலம், வட்டி விகி­தத்தை நிர்­ண­யிப்­பது, ரிசர்வ் வங்­கியின் சட்­டப்­படி குற்றம்.அதனால், வங்­கி­க­ளி­டையே போட்­டியை ஏற்­ப­டுத்தி, தேவஸ்­தானம் லாபம் பெற நினைத்­தது. தேவஸ்­தா­னத்தின், நிதி ஆலோ­ச­கரும், வரு­வாய்த்­து­றையின் முக்­கிய அதி­கா­ரி­யு­மான பாலாஜி, வங்­கி­க­ளிடம் தனித்­த­னியே, பேச்­சு­வார்த்தை நடத்­தினார்.இதில், 10.08 சத­வீத வட்­டிக்கு ஒரு வங்­கி­யிடம், ஒப்­பந்தம் செய்­துள்­ள­தாக, அதி­கார வட்­டா­ரங்கள், தெரி­விக்­கின்­றன.
அனைத்து வங்­கி­களும், இந்த வட்டி விகி­தத்தை, ஒப்­புக்­கொள்ளும் பட்­சத்தில், கடந்த மூன்று மாதங்­களில், கிடைத்த உண்­டியல் வரு­மா­னத்தை பிரித்து, அனைத்து வங்­கி­க­ளிலும் முத­லீடு செய்­வ­தாக தேவஸ்­தானம் கூறி­யுள்­ளது.இல்­லை­யென்றால், புதிய வட்­டிக்­காக ஒப்­பந்தம் செய்து கொண்ட வங்­கி­யி­லேயே அனைத்து முத­லீ­டு­க­ளையும், தொடர முடிவு செய்­துள்­ளது.4 கோடி வரு­மானம்கடந்த ஆண்டை விட, இம்­முறை, வட்டி விகிதம் 0.58 சத­வீதம் அதி­க­ரித்­துள்­ளதால், 700 கோடி ரூபாயை, முத­லீடு செய்­வதன் மூலம், கூடு­த­லாக, 4.06 கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்­புள்­ளது.இதே தொகைக்கு கடந்த முறை, 66.50 கோடி ரூபாய் வட்­டி­யாக கிடைத்­தது. புதிய திட்­டத்தின் கீழ், அடுத்த ஆண்டு, 70.56 கோடி ரூபாய், வட்டி கிடைக்கும், என, அதி­கா­ரிகள் எதிர்­பார்க்­கின்­றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)