பதிவு செய்த நாள்
28 நவ2013
00:24

ஐதராபாத்: வரும், 2014 – 15ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6 சதவீதமாக அதிகரிக்கும் என, மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:
நாடு படிப்படியாக பொருளாதார மந்த நிலையிலிருந்து விடுபட்டு வருகிறது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டை காட்டிலும், இரண்டாவது அரையாண்டில், பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, அடுத்த ஆண்டு பார்லிமென்ட் தேர்தலுக்கு பின், புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசின் கொள்கை திட்டங்களை பொறுத்து, வரும், 2014 – 15ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6 சதவீதமாக உயரும்.கடந்த நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 5 சதவீதமாக குறைந்து போனது.
இந்நிலையில், பொருளாதார மந்த நிலை காரணமாக, நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 4.4 சதவீதமாக இருந்தது. இது, இதற்கு முந்தைய ஜனவரிமுதல் மார்ச் வரையிலான காலாண்டில்,4.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும், இது, கடந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலாண்டில், 5.4 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.5 – 2.7 சதவீதமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அன்னியச் செலாவணி வரத்துக்கும், செலவுக்கும் இடையிலான வித்தியாசமே நடப்பு கணக்கு பற்றாக்குறையாகும். எனவே, உள்நாட்டில், அன்னிய முதலீட்டை அதிகளவில் ஈர்க்கும் வகையில், மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.இவ்வாறு, அலுவாலியா கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|