பதிவு செய்த நாள்
28 நவ2013
01:21

புதுடில்லி: நவம்பர், 1-15ம் தேதி வரையிலான, 15 வர்த்தகதினங்களில், முன்பேர சந்தைகளில் மேற்கொள்ளப் பட்ட வர்த்தகம், 2.56 லட்சம் கோடி ரூபாயாக மிகவும் சரிவடைந்து உள்ளது.
முதலீட்டாளர்கள்:இது, கடந்தாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகத்தை (7.24 லட்சம் கோடி ரூபாய்) விட, 65 சதவீதம் குறைவாகும் என, பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.,) தெரிவித்துள்ளது.பைனான்சியல் டெக்னாலஜீஸ் இந்தியாவால் துவங்கப்பட்ட, நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பணப்பட்டுவாடா பிரச்னையால், முதலீட்டாளர்கள் முன்பேர சந்தைகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதனால், முன்பேர சந்தைகளில் வர்த்தகம் வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுகிறது.
கணக்கீட்டு காலத்தில், தங்கம், வெள்ளி ஆகிய மதிப்பு மிகு உலோகங்கள் மீதான வர்த்தகம், 72 சதவீதம் சரிவடைந்து, 3.55 லட்சம் கோடியிலிருந்து, 98,039 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.இதே காலத்தில், இதர உலோகங்கள் மீதான வர்த்தகம், 71 சதவீதம் குறைந்து, 1.37 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 39,923 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.இதே போன்று, கச்சா எண்ணெய் உள்ளிட்ட, எரிபொருட்கள் மீதான முன்பேர வர்த்தகம், 63 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1.55 லட்சம் கோடியில்இருந்து, 56,777 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.
விளைபொருட்கள்:வேளாண் விளை பொருட்கள் மீதான வர்த்தகம், 19 சதவீதம் குறைந்து, 76,805 கோடியிலிருந்து, 61,790 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.உள்நாட்டில், தேசிய அளவில், 6 சந்தைகளும், மண்டல அளவில், 11 முன்பேர சந்தைகளும் செயல்பட்டு வருகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|